பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரித்தவர்கள் யாருக்கும் தெரியாமல் வயிற்றை மறைத்துத் கொள்வதைப்போல, கர்ப்பமே த ரிக் காத கண்ணுத்தாளும் வயிற்றை மூடிக்கொண்டே நாட்களைக் கடத்தினுள். துன்பங் களும் கடமைகளும் பெண்களுக்குத்தான் அதிகம்: பாயசம் சாப் பிட்ட நாக்கில் நெய் படிவதில்லை; ஆனால் அதைச் சாப்பிடும் போது கையில் ஒட்டிக் கொள்ளும் நெய்யைத் துடைப்பது ஒரு வேலையாகவே வந்து விடுகிறது. அது மாதிரித்தான் ம னி த வாழ்க்கையும் சுவையெல்லாம் ஆண்களுக்கு; சுமையெல்லாம் பெண்களுக்கு. - - - ஒன்பது மாதம் ஆகிவிட்டது. ஊரிலிருந்து கடிதங்கள் வந்த வண்ணமிருந்தன. கண்ணுத்தாளைப் பிரசவத்திற்கு ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கண்ணப்பன் வீட்டிலிருந்தும், கண்ணுத் தாள் வீட்டிலிருந்தும் எழுதிக்கொண்டே இருந்தார்கள். கடிதங் களேப்படிக்க படிக்கக் கண்ணப்பனுக்கே ஒரு உணர்ச்சி பிறந்து. விட்டது. கண்ணுத்தாள் உண்மையிலேயே கர்ப்பமாக கிடப்பது போன்ற உணர்வு அவனுக்கு வந்து விட்டது. - "அத் தான்!” 'என்ன கண்ணு?’ 'மற்ற ஏற்பாடுகளையெல்லாம் செய்து விட்டீர்களா? "என்ன ஏற்பாடு?...... ஒ கோ அதைக் கேட்கிருயா?” இருவரும் புதிய தம்பதிகளைப்போல் பேசிக்கொண்டார்கள். 'ஏய் கண்ணு, நீ உன் விருப்பத்தை எனக்குச் சொல்ல வில்லையே!... உனக்குப் பையன் வேண்டுமா, பெண் வேண் டுமா?’ 'அடேயப்பா, நினைத்ததைப் பிறக்க வைக்கும் விஞ்ஞானி யைப் போல் கேட்கிறீங்களே!’ 'உன்னைப் பொருத்த வரையில் நான் ஒரு விஞ்ஞானிதான் கண்ணு! நீ சிரித்துக் கொண்டே வாழவேண்டும்; நான் அதைக் கண்டு ரசித்துக் கொண்டே பொழுதைப் போக்க வேண்டும் இப்போது நான் இறங்கியிருப்பது அந்த அராய்ச்சியில்தான்.” 56