பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அத்தான்!” "உன் உள்ளம் மென்மையானது மிகவும் நுணுக்கமானது அதல்ைதான் உனது கவலைகளை அகற்ற பின்னலை அவிழ்ப்பது போல நான் நிதானமாகப் போய்க் கொண்டிருக்கிறேன்.” 'எல்லாம் எனக்காகத்தான் செய்தீர்களாக்கும்! உங்களுக் கும் சேர்த்துத்தானே?” 'அது என்னவோ உண்மைதான்! ஊரார் முன்னே நானும் தலை நிமிர்ந்து நடப்பேன் அல்லவா!' 'இப்பவே கோட்டை கட்டாதீர்கள். எல்லாம் மங்களமாக முடியட்டும்!” - 'இனி ஒன்றும் பயமில்லை. எல்லாவற்றையும் டாக்டர் கொரியனுக்கு ஒளிவில்லாமல் எழுதி விட்டேன். எ ன் னே ப் போலவோ, அல்லது உன்னைப்போல் மூக்கும் முழியுமாகவோ விக்ரகம் போல் ஒரு குழந்தையை ஏற்பாடு செய்து கொடு என்று எழுதியிருக்கிறேன்.' தைமாதம் பத்தாம் தேதி வாக்கில் எனக்கு பிரசவமாக லாம் என்று அத்தைக்கு எழுதியிருக்கிறேன். அதை அனுசரித்து நாம் ஏற்பாடு செய்யவேண்டும்.' - 'குறித்த நேர த் தி ல் உனக்குப் பிரசவமாகும்; பயப் படாதே!” என்று கொஞ்சலாகச் சொல்லிவிட்டு கண்ணப்பன் திருவனந்தபுரத்திற்குப் புறப்பட்டான். அவன் போய்க் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் சசிகுமார் வந்தான். 'தலைவர் எங்கே? "அவர் திருவனந்தபுரம் போயிருக்கிருர்: என்ன, விசேஷம் உண்டா சசி?” "இரண்டு வருஷத்திற்கு முன் காணுமல் போன என்தங்கை 57_