பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"உன் தம்பியைப் பார்த்த பின்னர்தான், கண்ணுத்தாளின் மடியில் தவழும் குழந்தை சொக்கநாதனுக்குப் பிறந்தது என் பதைத் தெரிந்துகொண்டேன்.” "அது எப்படி உனக்குத் தெரிந்தது?" ‘சுபத்ரா என்னிடம் அட்மிட் ஆகும்போது கொண்டுவந்த அவர்கள் கல்யாணப்படத்தில் இவர்தான் இருக்கிருர் என்ருர். கண்ணப்பன் கண்கள் கலங்கின. அப்போது கண்ணத்தாள் உள் வீட்டில் குழந்தையைத் தொட்டிலில் போட்டுத் தாலாட் டிக் கொண்டிருந்தாள். 'உனக்கு இப்போது இன்னொரு பொறுப்பும் கூடுகிறது. இந்த ரகசியமும் கண்ணுத்தாளுக்குத் தெரியக் கூடாது; ஏனென் ருல் ஒரு உத்தமி மலடியாக வாழ விரும்பினலும் விரும்புவாளே தவிர மா ன ம் இழந்தவளாக வாழ விரும்பவேமாட்டாள்' என்ருர் கொரியன். உடலை அடக்கி, நாவை அடக்கி, மனத்தை அடக்கி தெய் வப் பிறவியைப்போல வாழ்ந்த கண்ணுத்தாள் இறுதிவரை ரகசியத்தை வெளியிடாமல் அந்தக் குழந்தையைத் தன் குழந் தையைப் போலவே சீரோடு வளர்த்துப் பெரியவளாக்கி திரு மணமும் செய்து கொடுத்து விட்டாள். குழந்தை மலையாளத் திலே பிறந்ததால் பிற்காலத்தில் அவளு க் கு மலையாளத்து ஆச்சி என்ற பட்டப்பெயரும் வந்து விட்டது. 63