பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்சாதியிடம் கூடச் சொல்லாமல் ரகசியமாகத் தோண்டி எடுப்பானே தவிர போலீசுக்கா சொல்லுவான்?-என்று முனு. முனுத்துக் கொண்டு அந்தக் கடிதத்தை மேஜைக்குள் துாக்கி யெறிந்தார். இன்னசிமுத்து அந்த ஊருக்குப் புதிதாக வந்த இன்ஸ்பெக் டர். அதற்கு முன்பு அவர் சென்னையில் உத்தியோகம் பார்த் தார். திடீரென்று அவர் எதிர்பாராத வகையில் அவரை மதுரை மாவட்டத்திற்கு மாற்றிவிட்டார்கள். புதிய இடத்திற்கு வ்ந்த தும் அந்த ஸ்டேஷனிலேயே ஊறிப்போயிருந்த போலீசுக்காரர் களிடம் உள்ளூர் விவகாரங்களேயெல்லாம் கே ட் டறி ந் து கொண்டிருந்தார். அது போலீசு அதிகாரிகளின் பழக்கம். புதிய ஊரில் யார் யாரிடம் எப்படி எப்படி நடந்து கொண்டால் என் னென்ன நடக்கும் என்பதற்கு அதெல்லாம் ஒரு அனுபவ ரீதி யான ஜாதகம். - சேர்மன் சிங்காரவேலு மிகவும் நல்லவர் ஆல்ை இரவு நேரங்களில் மட்டும் தெருவிலே உலாத்திக்கொண்டு திரிவார். அவரைப் போலீசார் ஒன்றும் கேட்கக்கூடாது. அப்படி யாரா வது கேட்டுவிட்டால் தண்ணிர் இல்லாத காட்டிற்கு மாற்றி விடுவார். - - - - "இந்த ஊரிலேயே பெரிய பணக்காரர் தசரதன் செட்டி யார். எல்லோரும் அவரைத் தசரதச்சக்கரவர்த்தி என்று அடை மொழி போட்டு அழைப்பார்கள். ஏழைக்கு உபகாரி. இருந்தா லும் வீட்டு வேலைக்காரியைக் கூட விட்டு வைக்கமாட்டார். 'அபிமன்யு இந்த ஊர் அரசியல்வாதி. ஆர்ப்பரிக்கப் பேசு வார். தனவந்தர்களையெல்லாம் ஆழக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்பார், ஆல்ை தசரதச் சக்கரவர்த்திக்கு மட்டும் அவர் பெட்டிப் பாம்பாய் விடுவார். 1. 'அரிச்சந்திரன் ஒரு இன்பார்மெண்ட். வெளித்தகவல்களை ஸ்டேஷனுக்குச் சொல்வதைப் போலவே நமது இலாகாத் தக வல்களையும் எதிரிகளுக்குச் சொல்லிவிடுவான். இரண்டுபக்கமும் 66