பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ யாரை கொலை செய்தாய்? நிரூபிக்க வேண்டாமோ? கொலை என்ருல், கொலை செய்யப்பட்ட சரீரமாவது வேண்டாமா? உன் னைக் கேட்டால், வீரபாண்டி கொழும்பிற்குப் போய் விட்டான் என்கிருய், போலீசாரோ, அவன் கொலை செய்யப்பட்டு விட் டான் என்கிரு.ர்கள். சொல்லிவிட்டால் போதுமா?’ என்று, சாமித்துரையை சிறையில் சந்தித்து தைரிய மூட்டினர். இதே நேரத்தில் சர்க்கார் வக்கீல், படியானைச் சந்தித்து விசாரணை நடத்தினர். நீ உண்மையைச் சொன்னல்தான் தப்பிக்கலாம்; இல்லா விட்டால் உனக்கும் தூக்குத் தண்டனைதான்” என்ருர் சக்கார் வக்கீல். படியான் தேம்பித்தேம்பி அழுதான். "அழுது என்ன பயன்! உன் கையில் வெட்டுக்காயம் இருக் கிறது. அது அரிவாள் வெட்டு என்று டாக்டர்கள் சொல்லு கிரு.ர்கள். அதுமட்டுமல்ல, அன்ருெரு நாள் இ ர வு, - என் கையில் இருக்கும் அரிவாள் மக்கு அரிவாளல்ல; இது வீரபாண் டியை சரிபார்த்த அரிவாள்- என்று கூவி இருக்கிருய். இவை களையெல்லாம் ஒட்டு மொத்தமாக வைத்துப் பார்க்கும் போது இந்தக் கொலே உன்னத்தவிர வேறு யாராலும் நடந்திருக்காது என்று நினைக்க இடமிருக்கிறது” என்று சர்க்கார் வக்கீல் பீதியை உண்டாக்கினர். - படியான் நில்ே குலேந்து விட்டான். அவன் முகத்தில் வியர்வை துளிர்த்தது. சர்க்கார் வக்கீல், மறு நாளைக்கு வருவ தாகச் சொல்லிவிட்டுப் போனர். - இரண்டு நாட்கள் கழித்து சாமித்துரையின் வக்கீலுக்கு ஒரு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. படியான், கொலையுண்ட பிணம் புதைக்கப்பட்ட இடத்தைக் காண்பிக்கப் போவதாக அறிந்தார் சாமித்துரையின் வக்கீல். அவ்வளவுதான், வக்கீலுக்கு வழக்கின் மீது இருந்த நம்பிக்கையில் பாதி போய்விட்டது. வீட்டு வராந்தாவில் கைகளைப் பிசைந்துகொண்டு இங்கு மங்கு மாக உலாத்தினர். . . . . . 92