பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"படியானைப்பற்றி சாமித்துரை நல்ல அபிப்பிராயத்தைச் சொன்னனே! படியான் அப்படியா மாறி விடுவான். உண்ட வீட்டுக்குத் துரோகம் செய்யவே மாட்டான் படியான்' என்று வக்கில் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டார். "சரி, பிணமே கிடைக்கட்டுமே! பி ண ம் கிடைத்துவிட் டால் குற்றம் உறுதியாகி விடுமா என்ன? கொலை செய்தவனே அப்ரூவரானல் விடுதலையாகலாம் என்பது நீ தி யா ைல், கொலைக்கு உடந்தையாக இருந்தவன் மட்டும் எப்படி குற்ற வாளியாவான்?' வக்கீல் தானகப் பேசத் தொடங்கிவிட்டார். அவரது மனைவி வந்து, வேடிக்கை பார்த்த பின்புதான் வக்கீல் தானகப் பேசிக்கொண்டிருந்ததை நிறுத்தினர். போலீஸ் வாகனங்கள், ஊரைப் புழுதிக்காடாக்கின. அப் போது அவ்வளவாக Tப்புகள் இல்லை. லாரிகளே இருந்தன. குறிப்பிட்ட இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு போலீஸ் படை ஒரு கண்மாய்க்கரை வழியாகப் போய்க்கொண்டே இருந் தது. அவர்களுக்கு மத்தியில் படியானும் போய்க்கொண்டிருந் தான். அவ ன் கைகள் பின் பக்கமாகக் கட்டப்ப்ட்டிருந்தன. கொஞ்ச தூரம் போனதும் இந்த இடம் தான்; இங்குதான் புதைத்தோம்’ என்ருன் படியான். படியான் காட்டிய அந்த இடத்தில் புதிய பள்ளம் இருப் பதற்கான அறிகுறிகள் இருந்தன. உடனே போலீஸ் அதிகாரி அந்த இடத்தைத் தோண்டும் படி ஒரு போலீஸ்காரருக்கு உத்தரவிட்டார். போலீஸ்காரர் வியர்க்க வியர்க்க வெட்டினர். ஆனால், உள்ளே பிணம் இல்லை! வெறும் குழியாகத்தான் அது இருந்தது. " . . போலிஸ் அதிகாரி படியான் பக்கம் திரும்பி வெறிக்கப் பார்த்தார். . . . - . . . . . - . நான் என்ன எசமான் செய்யறது; இங்கே தான் புதைச் சோம் புதை ச்சு பதினேந்து நாளாச்சு! அதுக்குள்ளே என் 93