பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னென்ன நடந்துச்சோ!' எ ன் று த ை ர யை ப் பார்த்துக் கொண்டே பேசினன் படியான். போ லீ சாரு க் கு, வழக்கின் உயிரே போய் விட்டதாக நினைப்பு வந்து விட்டது. லாரி, போனபாதையிலே திரும்பியது. முயலை விரட்டிப் போன நாய், ஏமாந்ததைப் போல லாரி மிகவும் மெதுவாக வந்து கொண்டிருந்தது. - லாரி, ஏரிக்கரை மேல் வந்து கொண்டிருக்கும்போது முன் சீட்டில் இருந்த போலீஸ் அதிகாரிக்கு ஏதோ ஒரு வாடை தட் டுப்படுவதுபோல் தோன்றியது. உடனே வண்டியை நிறுத்து என்ருர் : • லாரி நின்றதும், அனைவரும் கீழே இறங்கினர்கள். சித்திரை மாதமானதலால் ஏரி காய்ந்து போய் வெடித்துக் கிடந்தது. எல்லோரும் முகத்தைத் தூக்கிக் கொண்டு மோப்பம் பிடித் தார்கள். - - , "சார் நிச்சயமாக இது பிணவாடைதான்!” என்ருர் ஒரு போலீஸ்காரர். i . . போலீஸ் அதிகாரியும் அதை ஆமோதித்தார். எல்லோரும் ஏரிக்குள் இறங்கினர்கள். வெகு தூரத்தில் ஒரு இடத்தில் சில கழுகுகள் உட்கார்ந்திருப்பதையும், சில கழுகுகள் தாவித்தாவிப் பறந்து இடம் மாறுவதையும் போலீஸ் அதிகாரி பார்த்துவிட் டார். அவ்வளவுதான்! எல்லோரும் அங்கே ஓடினர்கள். அந்த இடத்தில் ஒரு தலையில்லாத முண்டம் பிய்த்தெரியப் பட்டுக் கிடந்தது. கழுகுகள் அந்த உடலைச் சின்ன பின்னமாக்கி வைத்திருந்தன. சில அவயங்களை நரிகள் இழுத்துப்போயிருப் பதற்கான தடங்கள் தெரிந்தன. இதைப் பார்த்த பின்புதான் போலீசாருக்கு உயிர் வந்தது. அந்த இடத்தில் இருந்த ஒற்றைக் க்ால்செருப்பையும் ஒரு மேல்த்துண்டையும் போலீசார் கைப் பற்றிக் கொண்டு வந்தார்கள். : o - g; ; % 94.