பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கண்டெடுக்கப்பட்ட செருப்பு வீரபாண்டியுடையதாக இருக்கலாம். அங்கு கிடைத்த மேல் துண்டு கூட வீரபாண்டி யுடையதாக இருக்கலாம். ஆனல் அங்கு பிய்த்தெரியப்பட்ட பிரேதம் வீரபாண்டியுடையதா? அதுதான் அங்கே கேள்விக் குறி! அது வீரபாண்டியின் உடல்தான் என்று சர்க்கார் தரப்பில் நிரூபிக்கப்படவில்லை. வீரபாண்டியின் துண்டும், செருப்பும் அந்த இடத்தில் கிடைத்தன என்பதற்காக அது வீரபாண்டியின் பிரேதமாகிவிடுமா? • "வீரபாண்டி, இலங்கைக்குப் போகப் போவதாகத் தன் னிடம் கூறினர் என்று கிராம அதிகாரி கூறியிருக்கிருர். ஒரு வேளை, அவர் இலங்கைக்குக்கூடப் போயிருக்கலாம். அவ்வாறு அவர் இலங்கைக்குப் போயிருந்தால் இந்தத் தூக்குத் தண்ட னேக்கு யார் பொறுப்பாளி வீரபாண்டியன், எப்போதாவது ஊருக்குத் திரும்பி விட்டால், சாமித்துரையின் உயிர்ப்பலிக்கு உத்தரவாதம் நம்ம்ால் தர முடியுமா? ஆகவே, கண்டெடுக்கப் பட்ட பிரேதம் வீரபாண்டியுடையதல்ல என்று இந்த நீதிமன் றம் தீர்மானித்து சாமித்துரையை விடுதலை செய்யக் கேட்டுக் கொள்கிறேன். - - - இதுதான் வழக்கறிஞர் வி. எல். எத்திராஜ் வாதத்தின் சாரம. - - மறுநாளே தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. சாமித்துரை விடுதலை! 96.