பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

13

கே. பி. நீலமணி 13

பாகவதருடைய மனத்தில் எல்லை மீறிய மகிழ்ச்சியும், நம்பிக்கையும் பிறந்தன.

பாடங்கள் பெருகிக் கொண்டிருந்தபோது, 'இவர்கள் என்றாவது ஒருநாள் பயிற்சி முடிந்து அமெரிக்கா செல்ல வேண்டியவர்கள்தாமே?’ என்று பாகவதர் எண்ணிப் பார்த்தபோது, அவருக்கு உள்ளத்தை என்னவோ செய்தது.

பாகவதரைவிடப் பன்மடங்கு சோபியாவைநினைத்து கல்யாணி அம்மாள் தான் கலங்கினாள். ஆனல்ே இந்தக் கலாசாரத்தின் அடிப்படை!

கல்யாணி அம்மாளுக்கு பாபு ஒரே பிள்ளை. அவனுக் குப் பிறகு ஒரு பெண் பிறந்தது. அதன் மீது உயிரையே வைத்திருந்தார் பாகவதர். தம்பதியரை ஏமாற்றி விட்டுக் குழந்தை இறந்து விட்டது. அதன் பிறகு அவர் களுக்குக் குழந்தையே பிறக்கவில்லை.

இப்போது அந்தக் குறையைத் தீர்ப்பது போல் சோபியாவின் வருகையும், அவளுடைய செய்கையும் இருந்தன. அளவிற்கு மீறிய பாசத்துடன் சோபியா ஒட்டிப் பழகி வரவே, கல்யாணி அம்மாளுக்கு

சோபியாவை ஒரு நாள் பார்க்காவிட்டால் கூட என்னவோ போல் இருக்கும்.

எந்த விசேஷமோ, பண்டிகையோ வந்தாலும் டேவிட்டையும், சோபியாவையும் தங்கள் வீட்டில்தான் சாப்பிட வேண்டுமென்று கூறிவிடுவாள்.

மேஜை மீது பீங்கான் தட்டுக்களில் கத்தியினாலும், ஸ்பூனினாலும், ஃபோர்க்காலும் சாப்பிட்டுப் பழக்க முடைய அவர்கள், மனையில் சம்மணமிட்டு அமரிக்கை 'யாய் உட்கார்ந்திருக்கிற அழகையும், சாப்பிடுகிறபோது இலையில் ஒடுகிற ரசத்தையும் பாயசத்தைவும் கையால்