பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. பி. நீலமணி

59

கே. பி. நீலமணி s9.

துாணில் கட்டிவைத்து முழங்காலுக்குக்கீழ் பிரம்பால் விளாசித் தள்ளிவிட்டார். திருட்டுப் பிழைப்பு ஒரு பிழைப்பா!

காமாட்சி குறுக்கே வந்து நின்றுகொண்டு கத்தினாள்

' 'என் ஒரே பிள்ளை இவன். இனியும் இவன்மீது ஒரு அடி விழுந்தால் நான் கிணற்றில் போய் விழுந்து விடுவேன்' என்று ஆவேசம் வந்தவளைப்போல் கூறினாள்.

பிள்ளை கோபத்தோடு பிரம்பினை இரண்டாக முறித்து மனைவியின்முன் வீசி எறிந்தார். 'இன்றோடு இவன் யாரோ நான் யாரோ. இவனுக்கும் எனக்கும் உள்ள சம்பந்தம் அற்றுவிட்டது' என்று கூறியபடி துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

எவ்வளவு பெரிய வார்த்தைகள்- அன்று கோபத். தோடு கூறிய வாக்குத்தான் எத்தனை துாரம்-காலத்தால் மெய்யாகிவிட்டது, அதைத்தான் அப்போது அவர் நினைத்குக் கொண்டிருந்தார்.

லட்ச ரூபாய்க்குமேல் சம்பாதித்து வைத்திருக்கிறேன் என்ன பயன்? இத்தனை சொத்துக்கும் உரியவனைச் ஆண்டு அனுபவிக்க வேண்டியவனை நாலணா காசுக்காக நாயைப்போல் அடித்து அவன் வீட்டை விட்டே ஓடிப் போகக் காரணமாகிவிட்டேனே?" என்றுதான் அவர் உள் மனம் சதா உறுத்திக்கொண்டே இருந்தது. அதன் காரணமாக காணாமற் போன கருணாகரனைப் பற்றிப் பத்திரிகைகளில் எல்லாம் விளம்பரம் கொடுத்துப் பார்த்தார். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் கடிதங்கள் எழுதிக் கேட்டார். கை சளைத்ததுதான் மிச்சம்.