பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மலருக்கு மது ஊட்டிய வண்டு

“ტ மலருக்கு மது ஊட்டிய வண்டு

ஒரு நண்பர் வந்து மதுரை சித்திரைத் திருவிழாவில் கருணாகரனைப் பார்த்தேன்' என்று கூறினார். காமாட்சியும் அவரும் அன்று இரவு வண்டிக்கே மதுரை பயணமானார்கள். ஆனால் அழகர் ஆற்றில் இறங்குகிற திவ்ய சேவைதான் கிட்டியதே தவிர கருணாகரன் கண்ணில் படவே இல்லை. வருஷங்கள்தான் ஒடின.

பிறகு பட்டணத்தில் எக்ஸிபிஷனில் பார்த்ததாக நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவர் கூறினார். பட்டணத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த பலனாகத் தானிருந்து, பையனைக் காண முடியவில்லையே!

ஆனால்-அன்று வீட்டை அடைந்ததும் அவருக்கு அப்படியொரு நற்செய்தி காத்திருக்குமென்று பிள்ளை எதிர்பார்க்கவே இல்லை.

பாதி சாப்பிடும்போது காமாட்சியம்மாள், பம்பாயி லுள்ள தன் தம்பி தாமோதரனிடமிருந்து வந்திருக்கும் கடிதத்தைப் பற்றிக் கூறினாள். அதில் கருனாகனைப் பார்த்ததாக எழுதியிருப்பதை கேட்டதும், சாப்பிடும் போதே அவர் கடிதத்தை வாங்கிப் பார்த்தார்.

o கையலம்பியதும், புறப்படு காமாட்சி, பம்பாய் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடலாம். எனக்கு

என்னவோ இந்தத் தடவை நிச்சயம் அவன் என் கண்ணில் படுவான் போலத் தோன்றுகிறது”, என்று நம்பிக்கையும். உற்சாகமாய்க் கூறினார். ஆனால் காமாட்சியம்மாள் : அவருடன் செல்ல விரும்பவில்லை.

என் துரதிர் ஷ்டமோ, என்னவோ, நான் கூட வந்தாலே அவன் அகப்பட மாட்டேன் என்கிறான்

o, , -

மதுரைக்கும், திருச்சிக்கும், மதராஸுக்கும் இப்படி ஊர் ஊராய் என்னையும் சேர்த்துக் கொண்டு அலைந்தது