பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்துப் போ தம்பி - நன்றாய்ப் பார்த்துப் போ தம்பி. பள்ளிக் கூடம் செல்லும் போது பார்த்துப் ப்ோ தம்பி. மோட்டார் வரும், ஜட்கா வரும் மூர்க்க மாக லாரிவரும். ஆட்டோ ரிக்ஷா படப டென்றே அலறிக் கொண்டே ஓடிவரும். (பார்த்துப்) தெருவில் குறுக்கும் நெடுக்கு மாகச் செல்லல் தீமை ஆகும் தம்பி. விரைந்தே ஒடும் வண்டி யாலே விபத்து நேரக் கூடும் தம்பி. (பார்த்துப்) கல்லும் முள்ளும் உடைந்து போன கண்ணா டியும் கிடக்கும் தம்பி. செல்லும் போது காலில் நல்ல செருப்புப் போட்டுச் செல்வாய் தம்பி. - (பார்த்துப்) 107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/110&oldid=859890" இலிருந்து மீள்விக்கப்பட்டது