பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கல் வேண்டாம், சிமிண்டும் வேண்டாம் செலவும் வேண்டாம் தம்பி - வெகு சீக்கி ரமாய்க் கட்டிடலாம் சிறந்த வீடு தம்பி. இரும்பும் வேண்டாம், மரமும் வேண்டாம் எதுவும் வேண்டாம் தம்பி - மிக எளிதில் நாமும் கட்டிடலாம் இனிய வீடு தம்பி. கொத்தர் வேண்டாம், தச்சர் வேண்டாம் கொல்லர் வேண்டாம் தம்பி - ஒரு குறையும் இன்றிக் கட்டிடலாம் அருமை வீடு தம்பி. கதவு வேண்டாம், சன்னல் வேண்டாம் கம்பி வேண்டாம் தம்பி - உள்ளே கள்ளர் எவரும் நுழைய மாட்டார் கவலை வேண்டாம் தம்பி. 6+

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/65&oldid=860122" இலிருந்து மீள்விக்கப்பட்டது