பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தை குளிக்கத் தண்ணீர்க் குடம் கொண்டு போகிறேன் என்று நத்தை சொல்வதும், எத்தனை நாள் ஆகும் அத்தை வீடு செல்லவே? என்று குழந்தை கேட்பதும், பத்தே நாள்தான்; வேணு மானால் பார்த்துக் கொண்டிரு என்று நத்தை விடையளிப்பதும் மகிழ்ச்சி தரும் கற்பனையாகும். இப்படிப்பட்ட சின்னஞ்சிறு பொருள்களிலும் கரவு இல்லாமல் கலந்து உணரும் உள்ளம் கவிஞர்க்கும் குழந்தைகளுக்கும் வாய்த்த செல்வமாகும்." - . இயற்கைப் பொருள்களை மட்டும் அல்லாமல், செயற்கைப் பொருள்களையும் குழந்தைகள் காணும் காட்சியே தனிப்பட்டதாகும். விமானத்தைப் பற்றிக் குழந்தை கூறுவதைக் கேட்கலாம். * . - மனிதர் தம்மைத் தூக்கிக் கொண்டு வானத்திலே பறக்குது; வயிற்றுக் குள்ளே பத்திரமாய் வைத்துக் கொண்டே செல்லுது. விமானங்களும், மோட்டார்களும், கப்பல்களும் பெருகிய இந்தக் காலத்திலும், குழந்தைகளுக்கு யானையிடத்தில், தீராத ஆசை உண்டு. யானை வாங்கி அதன் மேல் ஏறி எல்லா இடங்களிலும் சுற்றிவர வேண்டும் என்று கூறுகிறது குழந்தை. வளரும் குழந்தை தன்னைச் சுற்றியுள்ள பெரியவர்களைப் பார்த்து, எதிர்காலத்தில் டாக்டராக, வாத்தியாராக, வக்கீலாக, நடிகனாக, சிப்பாயாக, போலீசாக ஆக வேண்டும் என்று கனவு காண்பதை நானாக இருந்தால்...? என்னும் பாடல் உணர்த்துகிறது. - - 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/9&oldid=860149" இலிருந்து மீள்விக்கப்பட்டது