பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*வள்ளல் டாக்டர் இராம. அழகப்பச் செட்டியார் 蒜疗” பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையிலுள்ள தனியார் மருத் துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். அழகப்பர் அறத் தின் துணை மேலாளர் திரு. பத்மநாபன் துணையாக இருந்துவந்தார். நான் மார்ச்சுத் திங்கள் சென்னை சென் மிருந்தபோது வள்ளலைப் பார்த்துவந்தேன். அசையாமல் கிடந்தவண்ணம் இருந்தார். அச்சமயம் அறிவியல் பயிற்றும் முறை' என்ற எனது நூல் விரைவாக அச்சாகிக் கொண்டிருந்தது, தமிழ்க்கடல் ராய.சொ. அவர்களையும் " கம்பன் அடிப்பொடி சா.க. அவர்களையும் கலந்து இந் நூலை வள்ளலுக்கு அன்புப் படையலாக்க எண்ணினேன். நலங்கிளர் ஊக்கம் எனும்புனல் பெய்து நாள்தொறும் அன்புற வளர்த்த பொலங்கிளர் முயற்சிக் கொடியினில் பூத்த பொருள் எனும் நறுமலர் கொய்து புலங்கிளர் தெய்வக் கலைமகள் அடிக்கே பொற்புற அணிந்துளம் களிக்கும் வளம்கிளர் டாக்டர் அழகப்ப வள்ளல் மலரடிக் குரியதிந் நூலே. என்ற பாடலும் உருவாயிற்று. இதை உடனே திரு. பத்மநாபனுக்கு அனுப்பி வள்ளல் அவர்கட்கு இசையுடன் படித்துக்காட்டுமாறு வேண்டியிருந்தேன். திரு.பத்மநாபன் தமிழறிவும் இசையறிவும் மிக்கவர். தேவார திருவாசக, திவ்வியப் பிரபந்தங்களில் ஈடுபாடு மிக்கவர். இவற்றி லுள்ள சில பாசுரங்களை இசைக்கக் கேட்பதற்கே வள்ளல் திரு. பத்மநாபனைத் தம் பக்கத்தில் வைத்துக் கொண் டிருந்தார். நான் அனுப்பிய பாடலை அடிக்கடி இசைக்கு மாறு வள்ளல் கேட்டதாகவும், அதை மனம் விரும்பி அதுபவித்ததாகவும் திரு. பத்மநாபன் எனக்கு எழுதியிருந் தார். மூன்று திங்கள் கழித்து நூல் வெளி வந்தது. அதன் முதற்படியைக் கண்டனுரர் சென்று அவர்தம் அருமைத் திருமகளார் உமையாள் இராமநாதன் கையில் சேர்ப்பித்து மழ்ேந்தேன்.