பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.8 மலரும் நினைவுகள் ஒரு சில நாட்களில் வள்ளலின் பருவுடல்தான் அவர் பிறந்த ஊராகிய கோட்டையூர் வந்து சேர்ந்தது. கோட்டையூரில் பிறந்த கோடீஸ்வரன் தாம்; இறந்தபின் அவ்வூர் சுடு (இடு) காட்டில் தம்மை அடக்கம் செய்வதை விரும்பவில்லை. தம் எண்ணம், அறிவு,பொருள் இவற்றைப் பணி கொண்ட கல்லூரி வளாகத்திலேயே தம் பருவுடலை எரியூட்ட வேண்டும் என்று விரும்பினார். இறப்பதற்கு நெடுநாள் இல்லை என்பதை உணர்ந்த வள்ளல் கல்லூரி வளாகத்தில் தமக்கு உரிய இடம் இது' என்று முன்னரே சுட்டிக் காட்டியிருந்தார். தன்னை துயிற்றுந் தனியிடம் சுட்டி பின்னர்த் துயின்ற பெருஞானி' என்று இவர்தம் ஞானத்தைப் பாராட்டுவர் மாணிக்க னார். இறப்பினுக்கு அஞ்சாத இப்பெருமகனார் ஈயாத பிறப்பினுக்குத் தான் பெரிதும் அஞ்சுவார். வள்ளல் அழகப்பரின் பருவுடலைத் தாங்கிய தேரைச் சுமார் மூன்று கல் தொலைவிலுள்ள கோட்டையூரிலிருந்து அனைத்துக் கல்லூரி மாணவர்களும் வடந்தொட்டுக் கல்லூரி வளாகத்திற்கு இழுத்து வந்தனர். மின்சார வேதியியலில் ஆராய்ச்சி நிலையத்திற்குக் கால் கோள் செய்ய நேரு வந்தபோது (25-7-1948) பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டதைவிட அழகப்பரின் பரு. உடலைத் தாங்கிய தேரைக் காணவும் பருவுடலை அங்கியங் கடவுள் உண்ணும் காட்சியைக் காணவும் பெரிய கூட்டம் திரண்டெழுந்தது. அன்று மக்கள் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தனர். இன்று (6-4-1957) மக்கள் கூட்டம் துன்பக் கடலில் ஆழ்ந்து கிடந்தது. 13. கொடை விளக்கு-125.