பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் டாக்டர் இராம. அழகப்பச் செட்டியார் grg நேரு வருகையினும் நீண்ட பெருங்கூட்டம் தேரு வருகைக்குத் தேம்பிற்று:-பாரும் அழாஅமை யாரோ அறிந்தார்காண்; வானும் தொழாஅமை கண்டாரைச் சொல்." என்ற மாணிக்கனார் பாடல் அழுகையையும் தொழுகை: யையும் காட்டுகின்றது. மக்கள் அனைவரும் அழுதனர்: தொழுதனர். நிலமகள் அழுவதையும் வான் மகள் புலம்பியதையும் காண்பதற்கு ஒருவரும் இல்லை என்ற குறிப்பையும் பாடலில் காணலாம். ஒரு டன் மேலாக சந்தனக் கட்டைகள் ஈமப் படுக்கை யாக்கப் பெற்றன. அந்தப் படுக்கையின்மீது வள்ளலின் திருமேனி கிடத்தப் பெற்று முறைப்படி செய்ய வேண்டிய சடங்குகள் செய்வித்த பிறகு தீ மூட்டப் பெற்றது. சந்தனக் கட்டைகளின் நறுமணம் வள்ளலின் புகழ்போல எங்கும் பரவியவுடன் கூட்டம் அழுத கண்ணிருடன் கலையத் தொடங்கியது. தானும் கலைகின்றேன், வீற்றிருந் தான்.வள்ளல் வளாகம்தனில் இருந்தான் நேற்றுஇருந்தான் இன்றுவெந்து நீறுஆனான் -பால்தெளிக்க எல்லீரும் வாருங்கள் ஏதுஎன்று இரங்காமல் எல்லாம் சிவமயமே யாம்.15 என்ற பாடலை வாயினால் நவிற்றிக் கொண்டே. வள்ளலின் ஆன்மாவும், 14. கொடைவிளக்கு - 14 15. பட்டினத்தார் பாடல்கள் ~ அன்னையாருக்கு, இறுதிக் கடன் இயற்றியபோது பாடியவை-10. பாடலில் இருந்தாள்’ என்பது இருந்தான்' எனவும் வீதிதனில்’ என்பது வளாகந்தனில்" எனவும் மாற்றப்பட்டன.