பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 & மலரும் நினைவுகள் பார்க்கத் தொடங்கி விட்டால், அவனது மனமும் ஊனுடம்பும், கள்ளப் புலன்களும் கருவறையை ஒட்டி நின்று சுற்றி, ஏவல் புரியும் சிறப்பு அங்கங்களாக மாறி விடும்’ என்று கூறி, உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல், தெள்ளித் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே" என்ற திருமந்திரப் பாடலை முத்தாய்ப்பாக நம் முன்னே வைப்பார். இன்னும் இதனையொட்டி சில பாடல்களைக் காட்டினார். விரிவஞ்சி அவை ஈண்டு கூறப் பெறவில்லை. நினைவு-4 : 1971-பிப்பிரவரி எ ன் ப த க நினைவு. என் மலை நாட்டுத் திருப்பதிகள் என்ற நூல் அச்சு வடிவம் பெற்றது. அதற்கு ஒர் அணிந்துரை ஜஸ்டிஸ் மகராஜனிடம் பெறுவதற்காகச் சென்னை வந்தேன். தியாகராய நகரில் அவர் இல்லத்தில் தான் (17, விசயராக வாச்சாரி சாலை) சந்தித்தேன்: ஒய்வாக இருந்தார். இப்படி ஒய்வாக இருக்கும்போது நாம் சந்தித்து விட்டால், ஏதாவது விருந்து கிடைக்கும்; அது சமய-தத்துவ விருந்தாகவும் இருக்கும்; இலக்கிய விருந்தாகவும் அமை யும். அப்போது அவர் பேச்சு சும்மா’ என்ற சொல்லைப் பற்றித்தான். இந்தச் சொல்லைச் சோம்பேறிகளும் கையாளுகின்றனர். சொல்லிழந்து நிற்கும் ஞானிகளும் கையாளுகின்றனர். இருப்பூர்திப் பயணத்தின் போது அருகிவிருப்பவரை என்ன வேலை பார்க்கின்றீர்கள்?’ ’ என்று வினவினால் அவர் சும்மா தான் இருக்கின்றேன்' என்று மறுமொழி தருகின்றார். "சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது" 7. திருமந்.-சிவபூசை -1 8. தா. பா: தேசோமயானந்தம்-8