பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 மலரும் நினைவுகள் மூலத்தையும் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து விடலாம். ஆனால் 'சும்மா'வின் பிறப்பை நினைக்க அம்மா!' என்று அதுபூதி நிலையை அடைந்த அருணகிரிநாதரைப் போல் கையை விரிக்க வேண்டியது தான்; அஃதாவது அவ்வளவு அர்த்தத்திற்கு அப்பாற்பட்ட பதம். என்று விளக்கு. வார். இதன் பொருளைக் கம்பராமாயணப் பாடல் ஒன்றினா லும் விளக்குவார். 'அநும்ன் இலங்கையில் பிராட்டியைத் தேடிப் புறப்படுகின்றான். மாளிகைக்கு மாளிகை தாவிக் கொண்டே போகின்றான். எங்குப் பார்த்தாலும் மதியை முட்டிக் கொண்டு நிற்கும் மாடங்கள். ஒவ்வொன்றும் கோமேதகத்தாலும் வைரத்தாலும் கட்டப்பட்டது. நீல மாளிகையின்மீது தாவியதும் அநுமனுடைய திருமேனி நீல மயமாகத் தோன்றுகின்றது; பொன் மாளிகையின் மீது தாவியதும் பொன் மயமாக மாறி விடுகின்றது. இதைப் பார்த்து அதிசயித்துக் கொண்டிருந்த கம்பன், கரியனாய், வெளியனாய், செய்யனாய்க் காட்டும், காண்டற்கு அரியனாய், எளிய னாய்த்தன் அகத்துறை அழக னேபோல்!" என்று சொல்லுவான். இப்படித் தான் சும்மா என்ற சொல் அதுமனின் திருமேனி பல வண்ணங்களைக் காட்டு வது போல பல பொருள்களைச் சந்தர்ப்பங்களால் காட்டி நிற்கின்றது. இவ்வாறு தன்னைச் சுற்றியிருக்கும் சூழலை யும், பற்றியிருக்கும் சமய சந்தர்ப்பங்களையும் பொறுத்து, பொருள் வேற்றுமைகளைப் பெற்று டால் அடிக்கின்றது. * சும்மா’ என்ற மணி வார்த்தை’ என்று விளக்குவார். மலை நாட்டுத் திருப்பதிகள் என்ற என் நூலின் அணிந்துரையில் ஜஸ்டிஸ் மகராஜன் கூறுவது: மலை 10. சுந்தர. ஊர்தேடு-102