பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I O 0

காய்ந்த புற்கட்டே அவள் உடம்பு: அவள் சதிராடும் நடையாள் அல்லள்: தள்ளாடி விழும் மூதாட்டி. சருகாகித் தளர்ந்த இந்த நிலையிலும் கணவன் மீது, தான் கொண்டிருந்த காதல் எத்தகையது என்பதைப் புலபடுத்தும்போது,

அறம்செய்த கையும் ஒயும் !

மக்களை அன்பால் தூக்கிப் புறம்போன காலும் ஒயும் !

செந்தமிழ்ப் புலவர் சொல்லின் திறம்கேட்ட காதும் ஒயும் !

செயல்கண்ட கையும் ஒயும் ? மறவனைச் சுமக்கும் என்றன்

மனமட்டும் ஓய்தல் இல்லை !

என்று குன்றாத தன் காதல் உணர்வைக் கூறிக் காட்டுகிறாள்' என்றான் அவன். "உண்மைதான், முதுமையில் காதலுணர்வு. உள்ளத்தளவில் நிறைவு கொள்ளுகிறது’’ என்று கூறிச் சிரித்தாள் அவள். 'வளியிடை போழப்படா முயக்கு வாழ்நாள் எல்லாம் வாய்க்குமா என்ன? - அதே குடும்ப விளக்குத் தலைவி, இரவில் மகனும் மருமகளும் துயின்ற பிறகு நடக்க முடியாத நிலையில், இருட்டில், தரையில் தவழ்ந்து போய் கணவன் படுக்கையில் சாய்கிறாள்.