பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

முதிர்ந்த கணவனுக்கு நீண்ட நாள் உடன் வாழ்ந்த

அவன் மனைவிதான் குறிப்பறிந்து பணிவிடை செய்ய முடியும் கணவனுடைய உணவுப் பழக்கமும் விருப்பு வெறுப்புகளும் மனைவிக்குத்தான் அத்துபடி ! அண்மையில் மேலை நாட்டில் ஒரு கணக்கெடுப்பு நடத்தினர். துணையிழந்த முதிய ஆண் பெண்களுள் நீண்ட நாள் வாழ்பவர் யார் என்று பார்த்ததில் பெண்களே நீண்டநாள் வாழ்கின்றனர்; ஆடவர்கள் மனைவியிறந்ததும் சீக்கிரம் இறந்து விடுகின்றனர்.

ஏனென்றால்,

மனைவியின் அன்புப் பணிவிடையை நம்பியே வாழ்பவர்கள் ஆடவர்கள் மனைவி இறந்ததும் - அவர்கள், அன்புக்கு ஏங்கும் அனாதைகள் ஆகிவிடுகிறார்கள். அந்த ஏக்கமே அவர்களைக் சீக்கிரம் கொன்றுவிடுகிறது.

ஆனால் பெண்கள் - அன்பைப் பிறருக்கு வழங்கியே பழக்கப்பட்டவர்கள்!