பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 &

அப்பெரி யோரிக ளெல்லாம்

- வெட்கமாய் இருக்கு தத்தான் கைப்பிடித் தணைக்கும் முத்தம்

ஒன்றேனும் காணாரி போலும்!--

என்று சுவையுணர்வோடு பட்டறிந்ததைப் பாடுகிறாள். பற்றி அணைத்துப் பாவையர் பதிக்கும் சூடான முத்தம் ஒன்றாவது இந்தப் பக்தர்களுக்குக் கிடைத்திருந்தால் பேரின்பம் என்று இறையின்பத்தைச் சொல்லமாட்டார் கிளாம். பூங்கோதைக்குக் காதல்தான் பேரின்பம்' என்று விளக்கினான் அவன்.

"ஏன் கடவுளின்பத்தைக் காதலின்பமாகக் கண்டவர் கள் இல்லையா?’ என்றாள் அவள்.

'உண்டு. மா னி க் வா ச க ரு ம், ஆண்டாளும், திருமங்கை ஆழ்வாரும் காதலையே கடவுளாகக் கண்ட வர்கள்’’ என்றான் அவன்.

"மலரினும் மெல்லிது காமம் - என்ற குறளடியை நீங்கள் அடிக்கடி புகழ்ந்து பாராட்டுகின்றீர்களே! அந்த உவமை எனக்குப் பொருத்தமாகப் படவில்லை. பலிபீடத் தில் தங்கள் ஆவியைப் பறிகொடுத்த அம்பிகாபதி - அமராவதி காதலையும், பாலைவனச் சூறைக்காற்றில் சின்னாபின்னப்பட்டுச் சிதறிப் போன கயசு - லைலாவின் காதலையும் மென்மையானதாக யார் நினைத்தார்கள்? அவ்வாறு நினைத்திருந்தால் அதன் குரல்வளையை இரக்க மில்லாமல் நெரித்திருப்பார்களா, பாவிகள்?... மேலும் மலர் ஒரு பருப்பொருள் (Concrete); காதல் ஒரு நுண்பொருள் (Obstract): இரண்டையும் ஒப்புமை காட்டுவது எவ்வாறு பொருந்தும்?' என்றாள் அவள்.

  • சிந்தனையின் ஆழத்தில் நீந்தும் புலவர் சிலர் உவமை களை இவ்வாறு நுட்பமாகக் கையாளுவதுண்டு. மேலோட்