பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

"வள்ளுவர் எதையும் ஆழமாகச் சிந்திக்காமல் கூற மாட்டார். குறள் ஒரு பலாச்களை, அதில் சக்கையே கிடையாது. நீ கேட்பாய் என்று நினைத்துத்தான் வள்ளுவப் பெருமான் மோப்பக் குழையும் அனிச்சம்' என்று விளக்கினார். மோந்து பார்த்தால் வாடக்கூடிய பொருள் உலகில் வேறு என்ன இருக்கிறது மலரைத்தவிர!” என்று கேட்டான் அவன்.

  • எதுவுமில்லை; சிலரதன் செவ்வி தலைப்படுவாரி' என்று குறிப்பிடுகிறாரே வள்ளுவர் செவ்வி என்ற சொல் எதைக் குறிப்பிடுகிறது?’ என்று வினவினாள் அந்த இன்ப வீணை.

"நல்ல கேள்வி கேட்டாய்! செவ்வி' என்பது வான வில் போன்ற ஒரு வண்ண வேறுபாட்டுச் சொல்; அழகு. காலம், பருவம், தகுதி, ஏற்ற சமயம், காட்சி, புதுமை, மணம், சித்திரை நாள் என்று பல பொருளைத் தரும் ஒர் ஊற்றுச்சொல் அது. இந்தச் சொல்லுக்குச் சரியான பொருள் சொல்ல எல்லா உரையாசிரியர்களுமே திணறு கிறார்கள். பரிமேலழகர் தன்மை’ என்று பொருள் செய் கிறார். பரிப்பெருமாள், என்ன பொருள் கூறுவது என்று புரியாமல் செவ்வி தப்பும் என்று கூறி மழுப்பிவிட்டுப் போய்விடுகிறார். காலிங்கர் அச் சொல்லுக்குரிய பொரு ளைக் கூறாமல் படிப்பவர் சரியாகப் புரிந்து கொள்வதற் குரிய அழகான விளக்கத்தை மட்டும் கூறிச் செல்கிறார்” என்றான் அவன்.

"என்ன அந்த விளக்கம்?’ என்று கேட்டாள் அந்த ஏழிசை.

• உலகத்து வண்டானது மலர் சிதையாமல் மதுவை அருந்துவது போலக் காமத்தின் செவ்வி அறிந்து கைக் கொள்ளும் மக்களும் உலகத்துப் பலர் உளர்-என்பது காலிங்கர் கூறும் விளக்கம்' என்றான் அந்த ஏந்தல்.