பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

"படைப்பதற்கும் பரிமாறுவதற்கும் பெருத்த வேறு பாடு உண்டு. பெரியோர்களுக்கு உணவிடுவது படைத்தல், கணவனுக்கு இடுவது பரிமாறுதல். ஏனென்றால் அரு கிருந்து அன்பு மனைவி பரிமாறும் போது, அவர்களின் இரு வரின் உணர்வுகளும், உணவோடு பரிமாற்றம் பெருகின்றன என்று விளக்கினான் அவன். அவன் கூறிய நுட்பத்தைச் கவையோடு புரிந்து கொண்டாள் அவள்.

உண்டு முடிந்ததும், இயல்பாகச் சிவந்திருந்த தனது உதடுகளைத் தாம்பூலத்தால் மேலும் சிவப்பாக்கிக் காட்டி னாள் அவள்: அவன் முத்தத்தால் இரத்தச் சிவப்பாக்கி னான் அந்த இதழ்க் கோவைகளை,

போவேந்தரின் பாட்டு வரிகளை எடுத்துக்காட்டிக் காதலைப் பேரின்பம் என்று விளக்கினர்கள் அன்று. இக் கருத்து வள்ளுவருக்கு உடன்பாடா என்று ஐயவினாவை அவன் முன் வைத்தாள் அவள்.

உடன்பாடு இல்லாமலா

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிது கொல் தாமரைக் கண்ணான் உலகு. -1103

என்று பாடுவார்? காதலின்பத்துக்கு மேலான, ஓரின்பம் இருக்கின்றது என்று கருதியிருந்தால், வள்ளுவர் வீட்டின் பத்தைப் (மோட்சம்) பற்றியும் பாடியிருக்க வேண்டும். * என்று விளக்கினான் அவன்.

"வள்ளுவப் பெருமான் காமத்துப் பாலையே பாடி யிருக்க முடியாது: காமத்துப்பால் திருக்குறளின் பெருமை யைக் குறைத்து விட்டது என்று திருக்குறள் பால் ஆழ்ந்த சடுபாடு கொண்ட மேலை நாட்டுப் பாதிரியார் ஒருவர் எழுதியிருப்பதை நான் படித்தேன்' என்றாள் அவள்.

"தமிழ் இலக்கண இலக்கியப் போக்கை நாடித் துடிப்

பறிந்து கற்காத குறை, வெளிநாட்டுக் காரரான அவரை

ம, ம-2