பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

"ஓ! உன் புன்னகை அது உன் கன்னவானத்தில் காட்சி தரும் வானவில்! பெண்களின் புன்னகைக்கு எவ்வளவு ஆற்றல்! கிரேக்கப் பேரழகி ஹெலனின புன்னகை ஆயிரம் போர்க்கப்பல்களைத் திராய் நகர கடற்கரைக்கு இழுத்துவந்தது. கிளியோப்பாத்திரையின் ч ன் ன ை8 உலகத்தைக் கட்டியாண்ட உரோமானியப் பேரரசின் நடுவில் விரிசலை உண்டாக்கியது. ஆங்கிலப் பேரரசி முதலாம் எலிசபெத் ஆயிரம் போர்க் களிறுகளைத் தன் புன்னகை இழையில் கட்டி வைத்திருந்தாள்.

உன் உதட்டோரப் புன்னகை

ஒவ்வொன்றுக்கும்

ஒராயிாம் பக்கம்

விருத்தியுரை எழுதலாமே!’ என்றான் அவன்.

அம்முத்தழகி

அவன் பேச்சைக்கேட்டு மீண்டும்

முறுவலித்தாளே தவிரப் பேசவில்லை.

அவன் சொன்னான்.

புன்னகையிலேயே பேசுவது ஒரின்பம் தான்! இராமனும் ைேதயும் கோதாவரி ஆற்றங்கரையில் இப்படித்தான் புன்னகையிலேயே பேசிக்கொண்டார்கள். சீதை வருவதைக் கண்டு ஒர் அன்னப்பறவை ஒதுங்கி ஓடியது. இராமன் அன்னத்தைப்பார்த்துப் பின் சீதையின் நடையைப் பார்ர்த் துப் புன்னகை செய்தான் அன்னத்தின் நடை சீதையின் நடைக்குத் தோற்றுவிட்டது" என்பது அப்புன்ன கையின் பொருள்.

பின்னர் இராமன் வருகையைக் கண்டு

ஆண் யானை ஒன்று ஒதுங்கி ஒடியது.

சீதை அந்த யானையைப் பார்த்துப்