பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 8

பட்டாளச் சக்ரவர்த்தி

பார்த்தாலும் உன்சிரிப்புக்

கட்டாணி முத்துக்குக்

காலில் விழ மாட்டாரோ? - என்று பாவேந்தர் சும்மாவா பாடுவார் என் கால்களும் தள்ளாடு இன்றன. ஒருகால்...நான் இன்று உன் காலில் விழுந்தாலும் வியப்பில்லை' - என்றான் அவன். அதற்கும் அவள் அரும்புச் சிரிப்பை அள்ளி வீசினாளே தவிர அல்லி இதழ் களைத் திறந்து பேசவில்லை.

அழகான பெண் வாய் திறந்து பேச வேண்டியதில்லை: புன்னகை அரும்புகளை மலரவிட்டுக் கொண்டிருந்தாலே போதும். .

காரிகையின் கண்கள் செய்யும் ஆழமான புண்களை அவர்கள் கட்டழகுப் புன்னகை நொடியில் ஆற்றிவிடுகிறது.

  • மெல்லியலார்க்குப் புன்னகை இயற்கை வழங்கிய ஆற்றல் மிக்க படைக்கருவி. வேலுக்குத் தப்பிவந்த வீரனும் வேல்விழியாளின் புன்னகை வீச்சுக்குத் தப்ப முடிவதில்லை.

சமங்கையரின் புன்னகை ஒரு மாணிக்க வீணை, அவர்கள் நினைத்தால் அதில் மோகனத்தையும் மீட்டு வார்கள்: அடுத்த நொடியில் முகாரியையும் மீட்டுவார்கள். அவர்களின் புன்னகை உணர்வுகளின் கொள்கலம்: கனவு களின் கருவூலம்.

அரும்புகள் விரியும்போது அழகும் இதழ் விரிக்கிறது. அரும்பு நீண்டநாள் தன்னிடத்தில்

பதுக்கிவைத்திருந்த இளமைக் கனவுகளைப் பூப்பில் புதுமணமாய்

  • புரட்சி கவி பாரதிதாசன் கவிதை