பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கண்டு மிதித்த அத்திப்பழம்

சித்திரைத் திங்களின் பிற்பகுதி! கத்திரிவெயில் நெருப்புப் பறப்பதுபோல் காய்கின்ற இரக்கமற்ற பகற்பொழுது ஒய்ந்து இரவுப் போர்வை இந்நிலத்தைப் போர்த்தது நுரை மணக்கும் சந்தனக் கட்டியைத் தோய்த்துக்

குளித்துத் துவட்டிய பெண்ணின் பொன்மேனிபோல் அப்பழுக் கற்ற நீலவானம். பருவம் அழகின் வாசலைத் தட்டிக்கொண்டிருக்கும் குருத்துக் குமரியின் குங்கும முகம் போல மலைக்குப் பின்னாலிருந்து தானத்தோடு நிலவுப்பெண்ணின் சிவந்தமுகம் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. அழகுக் குவியலை அள்ளிப்போட்டது போல் ஒப்பனையில் விருப்பமின்றிக் கூந்தல் மேகம் கலைந்து நிலாமுற்றத்தில் படுத்திருந்தாள் அவள். களைந்து எறிந்த நாயுடுஹால்" பதவி பறிபோன அமைச்சரைப்போல்

3 - هLo . 0ا