உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 የ

தூக்கிக்கொண்டு ஒடிப்போய் அவர் முன்னால் நிறுத்து கின்றனவே!

"நாம் கண்ணுக்கு மைதீட்டுவதற்காகத் தீட்டுக் கோலில் மையை எடுக்கும்போது, அது நம் கண்களுக்குப் புலப்படுகிறது. ஆனால் அருகில் கொண்டுவந்து தீட்டும் போது அதே மை, கண்களுக்குப் புலப்படுவதில்லை. கணவன் நம்மைப் பிரிந்து தொலைவில் இருக்கும்போது அவன் குற்றங்கள் நம் கருத்துக்குப் புலப்படுகின்றன: ஆனால் நம் அருகில் வந்ததும் அவன் குற்றங்கள் மறைந்து விடுகின்றன’’ என்று கூறிப்புன்னகை செய்தாள் அவள்.

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து 1985.

ம. ம.-4