பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்களும் கனவுகளும்

எட்டு நாள் உலகத் தமிழ்மா நாட்டை மதுரையில் இருந்து சுவைத்து விட்டுத் திரும்பியிருந்தான் அவன். பயணக் களைப்பு அவனைப் படுக்கையில் தள்ளிவிட்டது. மாலையில் குளித்துவிட்டுக் கைலியும் மேல் துண்டுமாகச் சாய்வு நாற்காலியில் படுத்தான் அவன்.

குளியலறைக் கதவு திறக்கும் 'சடக் கொலி அவன் காதில் விழுந்தது. அவனையறியாமல் அவன் பார்வை அப்பக்கம் திரும்பியது. ஈரத்தைப் பிழிந்துவிட்ட தலை யோடு. அரை குறையாக அள்ளிச்சு ருட்டிப் போட்டுக் கொண்ட ஆடையோடு, அவனைக் கடந்து கூடத்து அறை நோக்கிக் குலுங்கி நடந்து கொண்டிருந்தாள் அவள். பாதி opää, loan pås flasa (A Full Moon Half Dipped in Cloud) என்று அழகி, காடிவா'வைப் பற்றி டென்னிசன் (Tennyson) பாடிய வரி அவன் உள்ளத்தில் இசை எழுப்பிக் கொண்டிருந்தது. -

குளியலறையிலிருந்து பனி மலர்போல் குளித்து வரும் பெண்ணழகிள் தாக்கம் எந்த ஆடவனாலும் எதிர்க்க முடி யாதது. என்று எங்கோ படித்த நினைவு அவனுக்கு. "ஆம்" என்றது அவன் உள்ளம்.

ஐந்தடி உயரமுள்ள தனது அங்கத் தங்கத்தைச் சிவந்த அம்பர்ப் பட்டுக்குள் பதுக்கிக் கொண்டு, அவனருகில் வந் தாள் அவள். அருகில் கிடந்த பிரம்பு நாற்காலியில் உட்