பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

கார்ந்து அவன் கால்களை மடிமேல் தூக்கி வைத்துக் கொண்டு, வீணையின் தண்டை மெதுவாக வருடுவதுபோல் வருடினாள். அவள் இசை கூட்டிய அந்த இன்பலயிப்பில் மெய் மறந்திருந்த அவன், விழிகளை உயர்த்தினான்.

அவள் முகத்தைப் பார்த்தான்! குளிர்ச்சி யூட்டிய சரச்சந்தனப் பலகை போன்ற அவள் கன்னங்களைப் பார்த்தான்! நெற்றியைப் பார்த்தான்: நெற்றி விளக்குப் போல் அதன் நடுவில் இருந்த பொட்டைப் பார்த்தான்! சிவந்த இதழ்ப் பளிங்குக் கடைக்காலின் மீது எழும்பி நின்ற அவள் சிற்பக் கோபுர மூக்கைப் பார்த்தான்.

கடைசியில் அவன் பார்வை அவள் கண்களில் வந்து நிலைகுத்தி நின்றது: கூர்ந்து பார்த்தான்.

என்ன பார்க்கிறீர்கள்' என்று பவள

வாயைப் பாதி திறந்து கேட்டாள் அவள்.

    • ஆங்கிலப் பெரும் புலவன் சேக்ஸ்பியர் சொன்னான் :

பெண்களின் கண்கள் செழிப்பான வளவயல்கள்; சிந்தனையூறும் காப்பியங்கள்; படிக்கத் து.ாண்டும் பல்கலைக் கழகங்கள் சுட்டும் நெருப்புச் சுடர்கள்' என்று ஒரு பெண் ணின் கண்கள் புலப்படுத்தும் அழகுணர்ச்சியை எந்தப் பாவலனாலும் புலப்படுத்த முடியாது. பெண்களின் கண் களுக்கு அல்லியையும், தாமரையையும், குவளை மலரையும்