பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 4

கொடுப்பதும், கம்பன் தலையைக் கொட்டுவதும் எப்போ துமே உங்கள் இயல்பு' என்றாள் அவள்.

  • அப்படியில்லை! நயம் கருதிச் சொன்னேன்' என்றான் அவன்.

"கண்கள் பல நேரங்களில் தொல்லை கொடுத்தாலும். சில நேரங்கள் மிகவும் நன்மை செய்கின்றன” என்றாள் அவள்.

"எப்படி? என்றான் அவன்,

"கண்கள் விழித்திருக்கும் போது, உங்களைக்காணாமல் அழுதாலும், தூங்கும்போது உங்களைக் கனவில் கொண்டு வந்து நிறுத்துகின்றன. நனவில் காணமுடியாத உங்களைக் கனவில் கண்டு, உங்கள் பிரிவு என்னை எப்படி யெல்லாம் வருத்துகிறது என்று நான் கூறுவது வழக்கம். அந்த வகை யில் துணை செய்யும் இக்கண்களுக்கு என்னால் நன்றி கூறாமல் இருக்க முடியவில்லை. இந்தக் கனவு தரும் இன்பத்துக்காக நீங்கள் இல்லாத நாட்களில் தான் எப்போதும் தூக்கத்திலேயே இருக்கக் கூடாதா என்று எண்ணுவதுண்டு' என்று நானத்தோடு கூறினாள் அவள்.

"வள்ளுவர் இக்கருத்தை எவ்வளவு அழகாக உணர்ந்து பாடியிருக்கிறார் தெரியுமா? யார் யாரையோ காதல் மன்னன்’ என்று சொல்லுகிறார்கள். அப்பட்டத்திற்கு மிகவும் பொருத்தமானவர் வள்ளுவப் பெருமான்தான்' என்றான் அவன்.

"என்ன அப்பாட்டு?" என்று ஆவலோடு கேட்டாள் அவள்.

கயல் உண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தாரிக்கு

உயலுண்மை சாற்றுவேன் மன்-1212