பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

  • உன்னைப் போல் ஒரு தலைவி மோர்க்குழம்பு வைத்த நிகழ்ச்சி குறுந்தொகையில் கூறப்பட்டுள்ளது. அப்பாடல் தெரியுமா? -என்று கேட்டான் அவன். அவளுக்கும் அந்தப்பாடல் தெரியும், என்றாலும், அப்பாடலைக் கொண்டே அவனை மடக்க வேண்டும் என்று விரும்பினான். 'பாடலைச் சொல்லுங்கள் கேட்போம்!” என்றாள் அவள். அவன் சொன்னான் *முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடிஇக் குவளை உண்கண் குய்ப்புகை கழுமத் தான்து.ழத்து அட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணதல் முகனே. * காந்தள் மலர் மென்மையானது; குருதிபோல் சிவப்பானது. கட்டித் தயிரைப் பிசைந்ததால், அவள் விரல்கள் சிவந்துபோய் விட்டன. அவ்வளவு மென்மை வானவை அவள் விரல்கள். அதனால்தான் புலவன் “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்' என்றான். உன் விரல்கள்...' என்று கூறிச் சிரித்தான் அவன்,

"என் விரல்கள் முரட்டுத்தனமான முற்றிய முருங்கைக் காய்...அப்படித்தானே!' என்று பொய்க் கோபம் காட்டிச் சிணுங்கனாள் அவள்.

  • அப்படி நான் சொன்னேனா?” என்றான் அவன்.
  • குறுந்தொகை பாடல் 187-கூடலூர் கிழார்.