உண்பதில் எவரு டம்புக்(கு)
எது உத வாதென் றெல்லாம் கண்டனள், கறிகள் தோறும்
உண்பவர் தம்மைக் கண்டாள். உருளை நற் கிழங்கில், தன்னை
உடையானுக் கிருக்கும் ஆசைத் திருவுளம் எண்ணி எண்ணிச் செவ்விள நகைசெய் கின்றாள். பாவேந்தர் உண்பதில் பெரிய சுவைஞர். கலித்தொகைப் பாடலைச் சுவைப்பது போல் கறியையும் சுவைத்துச் சாப்பி டுவார். இலையில் பரிமாறப்படும் பொரியலுக்குத் தமிழ்ப் புலவர்களில் வேறு யாரும் உவமை சொன்னதாகத் தெரிய வில்லை. பாவேந்தர் மட்டுமே
பொரியலோ பூனைக் கண்போல்
பொலிந்திடும்.-- என்று உவமை கூறுகிறார்'-என்று சொன்னான் அவன்.
"இதைப் பற்றி வள்ளுவர் ஏதும் கூறவில்லையா?" என்று கேட்டாள் அவள்.
"ஏன் கூறாமல் உலகத்தைத் தம் குறளால் அளந்த வள்ளுவர் உணவைப் பற்றிச் சொல்லாமல் இருப்பாரா? வாழ்க்கைத் துணை நலம் பற்றிக் கூறும்போது தற்கொண் டான் பேணி என்ற இரண்டே சொற்களால், நான் மேலே கூறிய எல்லாக் கருத்துக்களையும் அடக்கிவிடுகின்றார், வள்ளுவர். உரையாசிரியர்களும் தன் கணவனை உண்டி முதலியவற்றால் பேணி என்றுதானே அத்தொடருக்குப் :ொருள் விரிக்கிறார்கள்'-என்று விளக்கினான் அவன்.