பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 4

என்று வியப்போடு கேட்டாள் அவள். "குடும்ப வாழ்க்கைஇன்று ஒரு தேர்தல் மாதிரிதானே? ஆட்சிப் பீடத்தை யார் பிடிப்பது என்ற போராட்டந்தான். பெண்களை மெல்லியலார் என்று சொல்வது இலக்கிய வழக்கு.

இன்றைய பட்டப்படிப்பும் ஆடவர்களோடு ஒப்பப்பழகும் பழக்கமும் பெண்டிரின் மென்மைத் தன்மையை ஒரளவு குறைத்து விடுகிறது. சம்பாதிக்கும் பெண்கள் தங்கள் உரிமையை நிலைநாட்டும் உணர்வோடு நடந்து கொள்ளத் தொடங்குகின்றனர். அதனால் எழும் சிக்கலே குடும்பப் போராட்டமாக மாறுகிறது’ என்றான் அவன். படித்து, பட்டம் பெற்றுத் தொழில்புரியும் பெண்கள் வெளிஉலகில் பழகும்போது போலியாக நானவும் வேண்டியிருக்கிறது. அதே போலக் கணவனிடமும் அவர்கள் நடந்து கொள்ளும் போது இயல்பான அவர்கள் மென்மை குறைந்துவிடுகிறது. போலித்தனம் இல்லாமல் நாணிச் சிரிக்கும் ஒரு பெண் கொம்பிலே கனிந்து தொங்கும் பழத்தைப் போன்றவள்.