பக்கம்:மலர் மணம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 105

இன்றைக்கே அத்தானே விட்டில் வரவேற்க வாய்ப்பு கிடைத்ததை எண்ணி எண்ணி இறுமாந்தேன். அத் தானுக்கு என்ன சிற்றுண்டி செய்துவைக்கலாம் என்று அம்மாவிடம் ஓடிக் கேட்டேன். அத்தான் காஃபி சாப் பிடுமா-டீ சாப்பிடுமா ? அல்லது ஆர்லிக்சு கொடுக்க லாமா ? ஒவல் பிடிக்குமா? என்று ஓயாது அம்மாவைத் தொண தொனத்தேன். அத்தான்! அழகாக உடுத்துக் கொண்டு, மாப்பிள்ளே கோலத்திலேயே வரவேண்டு மென்று கேட்டுக்கொள்கிறேன்.

நான் எப்படி அழகு செய்துகொள்ள ? எந்த நிறச் சேலை கட்டிக்கொண்டால் அத்தானுக்குப் பிடிக்கும் ? நேர் வாக்கு எடுத்துத் தலைவாரில்ை பிடிக்குமா ? கோணல் வாக்கு எடுக்கவா ? இரட்டைப் பின்னல் போட்டால் அத்தானுக்கு நன்முக இருக்குமா ? அல்லது ஒற்றைப் பின்னல் போதுமா ? மல்லிகைப் பூ சூடிக் கொள்ளவா? கதம்பம் வைத்துக்கொள்ளவா?

அப்பாவின் முன்னுல் அத்தானே நான் எப்படி பார்ப்பேன் ? எப்படி காஃபி கொடுப்பேன் ? ஊகம், எனக்கு வெட்கமாக இருக்கிறது. நான் அறையைவிட்டு வெளியே வரமாட்டேன். அத்தான் என்னைப் பார்க்க முடியாது. அம்மா கொடுக்கும் காஃபியைக் குடித்து விட்டு, அப்பாவிடம் பேசிக்கொண் டிருந்துவிட்டுப் போக வேண்டியதுதான். -

இல்லையில்லே-நான் வெளியே வராவிட்டாலும், பலகணி வழியாக எப்படியாவது அத்தானைப் பார்த்து விடுவேன். அம்மாவைக் காஃபி போடவிடமாட்டேன். நான்தான் தயாரித்துக் கொடுத்தனுப்புவேன். நான் போடும் காஃபியைப் பற்றி அத் தா ன் என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/107&oldid=655948" இலிருந்து மீள்விக்கப்பட்டது