பக்கம்:மலர் மணம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

e

106 D)Ir

சொல்லுமோ கற்பகம் போடும் காஃபி மாதிரியா அத்தானுக்கு என் காஃபி இருக்கும்?

அத்தான் இருட்டினதும் சரியாய் ஏழுமணிக்கு வீட்டிற்கு வந்துவிடுங்கள். நான் சொன்னது நினைவிருக் கட்டும்-நன்முக உடுத்துக்கொண்டு அழகாக ஆடம்பர மாக வரவேண்டும். உங்களைப் பார்த்ததும் அப்படியே அசர்ந்து போகவேண்டும்-நான் அல்ல-அப்பா. பார்ப் பதற்கு அவ்வளவு படாடோபமாக வரவேண்டும். ஆல்ை கறுப்புக் கண்ணுடியை மாட்டிக்கொண்டு வந்துவிடா தீர்கள்-அப்போது வெய்யில் இருக்காது, இருட்டு கேரம்-அப்புறம் அப்பா கேலி பண்ணுவார்.

எழுதின வெல்லாம் நினைவிருக்கட்டும் அத்தான் ! தயவுசெய்து உரிய நேரத்தில் தவருது வந்துவிடுங்கள். இ ங் த வேண்டுகோளை மறுக்கவோ-மறக்கவோ வேண்டாம். நீங்கள் வரப்போகும் திக்கையே நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். வருக ! வணக்கம் !

இப்படிக்கு, உங்கள் அல்லி.

அல்லியின் நீண்ட கடிதத்தைப் படித்து முடித் தேன். அவளுடைய நல்ல வாய்ப்பை எண்ணி வியந் தேன்-மகிழ்ந்தேன். என்னேயே மணந்து கொள்ள வேண்டுமென்று அவள் விரும்பினுள்-முயன்றாள்வெற்றியும் பெற்றாள். நாங்கள் இருவரும் மணந்து கொள்ள என் தந்தையும் ஒத்துக் கொண்டார்-அவள் தந்தையும் ஒத்துக்கொண்டார். இரு துருவங்களும் இணைந்தன-கீரியும் பாம்பும் விளையாடத் தொடங்கி விட்டன-இரண்டு குடும்பங்களும் இணைந்தாயிற்று. எங்கள் திருமணமே முடிந்த மாதிரிதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/108&oldid=655949" இலிருந்து மீள்விக்கப்பட்டது