பக்கம்:மலர் மணம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 மலர்

சிறப்பு. அருமையான சரிகை வேட்டி கட்டிக்கொண் டேன். பளபளப்பான பட்டு சட்டை போட்டுக் கொண்டேன். தோளின்மேல் வெண்பட்டு விசிறிமடிகையில் கடிகாரம்-விரல்களில் மோதிரம்-முகத்திற்குச் செய்யவேண்டிய மராமத்து எல்லாம் முன்னமேயே முடிந்துவிட்டன. போட வேண்டிய சோப்பெல்லாம் போட்டுச் சுரண்டித் தேய்த்துக் கழுவி, தடவ வேண்டிய தெல்லாம் தடவி, பூசவேண்டிய தெல்லாம் பூசியாய் விட்டது. இனி புறப்பட வேண்டியதுதான். புகைவண்டி நிலையம் வரையும் போய் உலாத்திவிட்டு வருவதாக அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டும் விட்டேன்.

இருட்டி விட்டது. மாமா வீட்டை நெருங்கினேன். அல்லியின் தம்பியும் தங்கையும் தெருவாயிற்படியில் என்னேக் கண்டதும், அத்தான் வருகிறது-அத்தான் வருகிறது என்று ‘பராக் போட்டுக்கோண்டே பைலட்’ போல் உள்ளே ஓடினர்கள். நான் வருவதை அறிந்து கொள்வதற்காக அல்லி செய்து வைத்துக்கொண்ட ‘சிக்னல் ஏற்பாடாக இருந்தாலும் இருக்கலாம் இது ! மாமியார் வீட்டுக்கு மருவுண்ணப் போகும் மாப்பிள்ளை யாகவே என்னே நினைத்துக்கொண்டு உள்ளே நுழைந் தேன். ஒரே அமைதி !

மாமா கூடத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தார். பாட்டி ஒரு முலையில் உட்கார்ந்திருந்தாள். அத்தை மாமாவின் பக்கத்தில் ஒரு தூணில் சாய்ந்துகொண்டு நின்றிருந்தார்கள். அல்லி இருக்கு மிடமே தெரிய வில்லை.

  1. * ;

என்னேக் கண்டதும், வா தம்பி ‘ என்று அன்பு ததும்ப அத்தை அழைத்தார்கள். வாடா அழகா’ என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/110&oldid=655952" இலிருந்து மீள்விக்கப்பட்டது