பக்கம்:மலர் மணம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 111

அல்லியை ஏறெடுத்துப் பார்க்க வெட்கமாய் இருந்தது. என்ன அழைத்த குற்றத்திற்காக வருந்தி மன்னிப்பு கேட்பவள்போல், அவள் ஏக்கத்துடன் என்ன நோக்கினுள். நானே சாகாமல் செத்துக்கொண்டிருக் தேன்.

இந்த நிலையில், ‘இவனை வெறுங்கையால் அடித் தால் பெருமை பெற்று விடுவான்; இந்த நாயைக் செருப்பால் அடிக்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே ஓடி ஒரு செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டு வந்தார் மாமா.

என் சிந்தனை வேலை செய்யத் தொடங்கிற்று. அவரோ பெரியவர்; அம்மானுக்கு அம்மான் ; அத்தை கணவனுக்கு அத்தை கணவன். அவரை மன்னிப்பதாஎதிர்ப்பதா? அதாவது, மாமாவிடம் செருப்படி படுவதா அல்லது அதே செருப்பைப் பிடுங்கிக் கொண்டு அவரை அடிப்பதா? என் இளமைக்கும் வன்மைக்கும் ஒரு குத்து விட்டால் மாமா மல்லாந்து விடுவார். அதிலும் மனவெழுச்சி தோன்றி விட்டால் மதயானையின் ஆற்றல் வந்துவிடும். உளநூல் படித்து இதைத் தெரிந்து கொண்டிருந்தேன் - இப்போது அநுபவத்திலேயே இதை ஒத்திட்டுப் பார்த்து விடலாமா என்று எண்ணி னேன்.

பொறுமையின் பெருமையும், மன்னிப்பதின் மாண் பும் என் நினைவிற்கு வராமல் இல்லை. ‘ தோண்டுபவர் களையும் தாங்கும் நிலம்போல, துன்புறுத்துபவர்களைப் பொறுத்துக் கொள். துன்பம் செய்தவர்களே மன்னிப் பது மட்டுமல்ல, மேலும் அவர்களுக்கு இன்பம் செய்’ என்ற வள்ளுவரின் வாய்மொழிகள் சில விடிைகளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/113&oldid=655955" இலிருந்து மீள்விக்கப்பட்டது