பக்கம்:மலர் மணம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 மலர்

என் உள்ளத்தை வெல்ல முடிந்தது. மாமாவின் செருப் படி நெருங்க நெருங்க, மான உணர்வு அலைகடலெனப் பொங்கிற்று.

அடிக்க வந்த மாமாவின் செருப்புக் கையை என் இடக்கையால் தடுத்து, வலக்கையால் அந்தச் செருப் பைப் பிடுங்கிக்கொண்டு அவரை அடிக்க ஓங்கினேன். அப்பாவை அடிக்காதீர்கள் அத்தான்-அப்பாவை அடிக்காதிர்கள்’ என்று சொல்லிக்கொண்டே அல்லி என் கையைப் பிடித்துக் கொண்டாள். எனக்கும் மனம் மாறிவிட்டது. மாமாவை நோக்கி இரக்கப்பட்டேன்.

என்னையாடா அடிக்க வந்தாய் ? தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற திமிரா ? என்று சொல்லி, எண்ணெயில் போட்ட பண்ணியம்போல் மாமா குதித் தார். யாரங்கே? ஓடிவாருங்கள்! என்று உரக்கக் கூவி யாருக்கோ குரல் கொடுத்தார். உடனே தெருப்பக்கத் திலிருந்து இரண்டு குண்டர்களும், தோட்டத்துப் பக்கத் திலிருந்து இரண்டு முண்டர்களும் ஓடிவந்தார்கள். நான் எதிர்த்து அடிக்காமல் இருப்பதற்காகவும், தெருப்பக்க மாகவோ-தோட்டத்துப் பக்கமாகவோ ஓடி வெளியேறி விடாமல் இருப்பதற்காகவும் மாமா செய்து வைத்த முன்னேற்பாடுபோலும் இது?

இவனைப் பிடித்துத் துண்ணில் கட்டுங்கள் ‘ என்று மாமா அவர்களுக்கு ஆணேயிட்டார். கயிற்றுடன் கால் வரும் என்ன நெருங்கினர். முண்டனுக்கு இரண்டு ஆள் என்பார்கள். நான்கு தடியர்களிடம் நான் ஒருவன் என்ன செய்ய முடியும்? அவர்கள் என்னைக் கட்டிப் பிடித்தார்கள். என் வன்மை கொண்ட மட்டும் திமிறி உதறினேன். கையால் குத்து குத்து என்று குத்தினேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/114&oldid=655956" இலிருந்து மீள்விக்கப்பட்டது