பக்கம்:மலர் மணம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 மலர்

அவிழ்த்துக்கொண்டு, என் உடம்பு முழுவதும் வாங்கு வாங்கு என்று வாங்கிக்கொண்டிருந்தார்.

வலி பொறுக்க முடியாது துடிதுடித்தேன். வாய் விட்டு அழ மானம் இடந்தரவில்லை. ஈ, எறும்பு மொய்க் காது என்னே வளர்த்த அன்னையையும், மனங்கோணுது கேட்டவையெல்லாம் வாங்கித் தந்து வளர்த்த தந்தை யையும் நினைத்து நினைத்து நெஞ்சம் பிளந்தேன். அவர் களிடம் சொல்லியிருந்தால் அனுப்பி யிருக்கமாட்டார்கள் -இந்த நிலை எனக்கு நேர்ந்திராது-என்ன செய்வேன் ! யாரிடம் சொல்வேன்! பெற்றாேரைப் புறக்கணித்து மறைத்து வஞ்சிக்கும் பிள்ளைகளின் நிலை இதுதான் போலும் !

இன்னும் மாமா விட்டாரில்லை. ‘ ரயிலிலிருந்து நேரே எங்கள் வீட்டிற்கு வந்து, நாங்கள் இல்லாத சமயத்தில் அல்லியிடம் பேசி மயக்கிவிட்டுப் போன யாமே ? நீயும் உன் அப்பனும் சேர்ந்துகொண்டு, நாளேக்கு நடக்கவிருந்த பரியத்தைக் குருசாமி மூலம் கலைத்து விட்டீர்களாமே ! அங்கிருந்து வந்தவர் எல்லாம் எனக்குச் சொன்னர். போதாக்குறைக்கு, விழாவின்போது, மலையடிவாரத்து மரச்செறிவிலே அல்லியை நீ தனியாகக் கண்டு காதல் விளேயாட்டு விளையாடியைாமே ! உங்களைத் தற்செயலாகப் பார்த்து விட்ட என் நண்பர் ஒருவர் காலையில் வந்து இந்தச் செய்தியைச் சொன்னர் என் மானமே போய்விட்டது. நான் எப்படியடா வெளியில் நடமாடுவது ? உன்னைக் கொன்றாலும் என் சினம் தீராது” என்று சொல்லிச் சொல்லி மாமா என்னே மேலும் மேலும் தாக்கிக்

கொண்டே யிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/116&oldid=655958" இலிருந்து மீள்விக்கப்பட்டது