பக்கம்:மலர் மணம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 115.

வேதனை தாங்கமுடியவில்லை-வெம்பினேன்-வெய் துயிர்த்தேன். மயக்கம் வருவதுபோல் தலை சுற்றிற்று. கண்கள் இருண்டன. நிமிர்ந்திருந்த தலை சோர்ந்து தொங்கிவிட்டது. அதன் பிறகுதான் மாமா அடிப்பதை நிறுத்தினர். இறந்துவிடுவேனே என்னவோ என்று அஞ்சி விட்டுவிட்டிருப்பார் போலும்! அத்தையும் அல்லியும் கத்தி எடுத்துக்கொண்டுவந்து கயிற்றை அறுத்து, கட்டிலிருந்து என்ன விடுவித்தார்கள். நான் துவண்டு சுருண்டு கீழே விழுந்துவிட்டேன். அதன் பிறகு என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது.

சிறிதுநேரம் சென்றிருக்கும்-விழித்துப் பார்த்தேன். அத்தையின் மடிமேல் என் தலே இருந்தது. கால் மாட்டில் டாட்டி அமர்ந்து பரிவுடன் தடவிக்கொண் டிருந்தாள். அல்லி என்னென்னவோ எனக்குச் செய்து கொண்டிருந்தாள். முதல் உதவி செய்யும் முறையை அவளுக்குப் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொடுத்திருந் தார்கள். அது இப்போது பயன் தந்திருக்கிறது. மனக் கலக்கங் கொண்ட மாமா, இவற்றையெல்லாம் கண்டும் காளுததுமாய் மலேபோல் நாற்காலியில் சாய்ந்திருந்

தார்.

அல்லி காஃபி எடுத்துக்கொண்டுவந்து குடிப்பாட்ட முயன்றாள். அந்தகேரத்தில் அவர்கள் வீட்டுக் காஃபி என் உள்ளே இறங்குமா ? அவ்வளவு மானங்கெட்டவனு நான் ? அத்தனை சூடு சுரணே இல்லாதவன நான் ? அல்லியின் கையை எத்தி, காஃபியை இடறித்தள்ளி விட்டேன். அது மாம்ாவின் முகத்தில் அடித்து .

மெள்ள எழுந்து உட்கார்ந்தேன். அத்தையின்

கலக்கத்துக்கு அளவேயில்லை. ன்ெ விட்டில் பிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/117&oldid=655959" இலிருந்து மீள்விக்கப்பட்டது