பக்கம்:மலர் மணம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 125.

கொள்வோமே ! அப்பாவிகளுக்குக் காசு கொடுத்து அனுப்பி, எதிரியை அடித்துவிட்டு வரச் செய்கிறார்கள். இந்த அப்பாவிகள் அதே பழ்க்கத்தில் தங்களையும் வந்து தாக்கிக் காசு கேட்கலாமல்லவா ? இதுவும் நடக்கத் தான் செய்கிறது. பாய்ந்த மடையாலேயே வடிவதும் உண்டுதானே! எனவே, இந்தப்பழக்கமெல்லாம் எனக்கு அறவே பிடிப்பதில்லை. உள்ளுக்குள் அப்பாவை நொந்து கொண்டேன்-அவருக்காக இரக்கமுங் கொண்டேன் ; ‘ஏன் ? மாமாவின் ஆட்கள் அப்பாவைத் தாக்க

என்றைக்கு எங்கள் வீட்டிற்கு வர இருக்கிறார்களோ !

கற்பகத்திற்குத் திருமண ஏற்பாடு செய்யக் கலிங்க நத்தம் சென்றிருந்த குல்லூகபட்டர் குருசாமி மறுநாள் வீட்டிற்கு வந்தார். அப்பா ஆவலுடன் நடந்ததை வின விர்ை. காரியம் கைகூடவில்லை என்று கை விரித்தார் குருசாமி. ஏமாற்றத்துடன், ஏன் கைகூடவில்லை ? என்று அப்பா கேட்டார். குருசாமி விவரமாகச் சொன்னர்:

மாப்பிள்ளே பாண்டியனுடைய தகப்பனர் முத்தைய முதலியார் குடும்பத்துடன் கலிங்கநத்தம் என்னும் தம் மூரில் குடியிருக்கிறார். பாண்டியனே, கோட்டைத்தளம் என்னும் ஊரில் இன்சுபெக்டர் வேலே பார்க்கிரு.ர். பிள்ளேயிருக்கும் இடம் வேறு-பெற்றாேர் இருக்கும் இடம் வேறு. முத்தைய முதலியார், உம் மகள் எங் களுக்கு வேண்டாம் ? எனவே பரியத்தை நிறுத்தி விடவும்” என்று மாயாண்டிக்கு ஆள் மூலம் செய்தியனுப் பியது இன்சுபெக்டர் பாண்டியனுக்குத் தெரியாது. தம் அப்பா மலேச்சாரல் என்னும் ஊருக்குச் சென்று, மாயாண்டி மகள் அல்லியைத் தமக்கு உறுதிப்பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/127&oldid=655970" இலிருந்து மீள்விக்கப்பட்டது