பக்கம்:மலர் மணம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மலர்

தேதியே நடத்திவிடலாம் என்று திருமணத்திற்கு நாளும் குறித்துவிட்டார்கள்.

யார் எந்த ஏற்பாடு செய்தாலும் நான் ஒத்துக் கொள்ள வேண்டுமே! அப்பாவிடம் அமைதியாக என் மறுப்பைத் தெரிவித்தேன். அவர் ஏற்றுக் கொள்ள வில்லை. மேலும் கடுமையாகத் தெரிவித்துப் பார்த்தேன். அவர் அதற்குமேலும் க டு ைம ய ர க எ ன் னே வற்புறுத்தி நெருக்கினர். நான் கண்டிப்பாகச் சொல்லி விட்டேன் :- “ அப்பா ! நான் மணந்தால் அத்தானத் தான் மணந்து கொள்வேன்-இல்லாவிட்டால், இந்தப் பாண்டியன் என்றல்ல-வேறு எவரையுமே மணந்து கொள்ள மாட்டேன்-கன்னியாகவே காலங்கழிப்பேன் -இது உறுதி” என்று சொல்லிக் கண்ணிரும்

கம்பலையுமாய் அவர் காலேக் கட்டிக்கொண்டேன்.

அப்பாவுக்கு ஒன்றும் ஒடவில்லை; செய்வதறியாது திகைத்தார். ‘ அப்படி யென்றால் நான் அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்ன ஆவது?” என்று என்ன மடக்கினர். “அவர்கள் உங்களுக்கு முதலில் கொடுத்த வாக்குறுதி என்ன ஆயிற்று ? அதைக் காற்றில் பறக்க விட்டுப் பரியத்தை நிறுத்தினர்கள் அல்லவா? அது போல இப்போது நீங்களும் வாக்குறுதியை மீறலாமே ‘ என்று நான் அப்பாவை மடக்கினேன். சிறிது நேரம் யோசித்தார். “அது முடியாது. நான் முத்தைய முதலியார் முகத்தில் எப்படி விழிப்பது ? உன் திருமணம் கைகூடிக் கைகூடிக் கலந்து கொண்டே போனுல் நாலுபேர் என்னே எப்படி மதிப்பார்கள் ? ஊரில் நான் எப்படித் தலே காட்டுவது ? எனக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/134&oldid=655978" இலிருந்து மீள்விக்கப்பட்டது