பக்கம்:மலர் மணம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 மலர்

“ அல்லியேதான் எனக்குக் கடிதம் எழுதியிருக் தாள். தான் பாண்டியன மண்க்க ஒத்துக் கொண்ட தாகவும், பங்குனி பத்தாம் தேதி திருமணம் என்றும் எழுதியிருந்தாள். இதோ பார் அந்தக் கடிதத்தை! இதன்படி என்றைக்கோ அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டிருக்குமே ! உனக்குத் தெரியாதா? ஒரு வேளை, யாருக்கும் தெரியாமல் வெளியூரில் போய்த் திருமணத்தை நடத்தி விட்டார்களா ?” -

“ அல்லி உனக்குக் கடிதம் எழுதியிருந்தாளா ? அவள் எழுதியதுவரையும் உண்மைதான். ஆனல் அதன்படி திருமணந்தான் நடக்கவில்லை.” -

“ஏன் நடக்கவில்லை? நம் அப்பா முக்தி பரியத் தைக் கலேத்ததுபோல் இப்போதும் திருமணத்தைக் கலைத்து விட்டாரா ?

‘’ நம் அப்பா ஒன்றும் கலைக்கவில்லை. அல்லியின் அப்பாவேதான் நிறுத்திவிட்டாராம்,’ -

“அவரே முயற்சி செய்து பிறகு நிறுத்தியது எதற்காக ? -

‘ ஊரில் என்னென்னவோ சொல்வதாக நம் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள்.”

 என்ன அது ρι,

“நம் மாமா மாயாண்டி முதலியார், மகள் திருமண ஏற் பா ட் ைட, செங்கல்பாளையத்திலிருக்கும் தம்

தம்பிக்கு-அதாவது நம் சின்ன மாமாவுக்குத் தெரி வித்து விட்டு வருவதற்காகப் புகைவண்டியில் சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/146&oldid=655990" இலிருந்து மீள்விக்கப்பட்டது