பக்கம்:மலர் மணம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4Δ6πτιο 149

யார்?’ என்று கேட்டுக்கொண்டே இரண்டு போலீசுக் காரர்கள் என்ன நெருங்கினர்கள். அவர்களுள் ஒருவர் இன்சுபெக்டராகவும், இன்ைெருவர் முன்னவரின் கீழ் வேலை செய்யும் ஒரு காவலராகவும் காணப்பட்டனர். இன்சுபெக்ட்ரை இதற்குமுன்பே எங்கேயோ பார்த்த தாக நினைவு வந்தது. ஆம், அவரே தான்-நான் புகை வண்டியில் வந்துகொண்டிருந்த பொழுது விழுப்புரம் சந்திப்பில் என்னிடம் தகராறு செய்தாரே, அவரேதான். -எங்கள் ஊர்ப்புகைவண்டிநிலையத்தில் நான் அமர்த்திய வண்டியை எனக்குப் போட்டியாகத் தட்டிக் கொண்டு போய்விட்டாரே, அவரே தான் ! எங்கள் ஊர் இன்சு பெக்டர் என்று தெரியாமல் அப்போது நான் அவரோடு தகராறு செய்து விட்டிருப்பதை இப்போது உணர்ந்’ தேன். மேலும், கற்பகத்துக்கும் அல்லிக்கும் மாப் பிள்ளேயாக மாறி மாறி வரவிருந்து தவறவிட்ட அந்தப் பாண்டியன் இவர்தான் என்றும் புரிந்து கொண்டேன்.

கீழே விழுந்து கிடந்தவன், தன்னே நான் கொல்ல முயன்றதாக இன்சுபெக்டரிடம் முறையிட்டான். உடனே என்னைக் காவல் (போலீசு நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். “ ஏன் அவனைக் கொல்லப் போய்ை ?” என்று இன்சுபெக்டர் பாண்டியன் கேட்டார். “நான் அப்படி யொன்றும் செய்யவில்லை; அவகைவே என்ன வம்புக்கிழுத்தான் ; இதில் ஏதோ சூது இருக்கிறது” என்று நடந்ததை, விவரமாக நான் சொன்னேன். யாரிடம் பொய் சொல்லுகிறாய் உண்மையை உரைக்கி முயா-அல்லது உதை கொடுக்கவா?” என்றார் பாண்டி யன். ‘ கான் உண்மையை உரைத்தாய் விட்டது; நீங்கள் எது வேண்டுமாலுைம் செய்யலாம்” என்று சொன்னேன் நான். ‘மயிலே மயிலே இறகு போடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/151&oldid=655996" இலிருந்து மீள்விக்கப்பட்டது