பக்கம்:மலர் மணம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 மலர்

என்றால் போடாது; இவனே அந்த அறைக்குள் தள்ளுங்கள் -கொடுக்கவேண்டியதைக் கொடுத்தால்தான் இவன் உண்மையைக் கக்குவான்” என்றார் பாண்டியன். நான் அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டேன். பர்ண் டியன் இடி இடித்துப் பேய்மழை பொழிந்தார். வெளிச் செய்தியிலிருந்து சொந்தச் செய்திக்கு வந்து விட்டார்.

“ டேய் ! உன்னை நான் வெகுநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் வாழ்க்கையில் குறுக்கிட உனக்கு என்ன துணிச்சல் ?”

“ நான் ஒன்றும் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிட வில்லையே. என்றுமே எவர் வாழ்க்கையிலுமே குறுக் கிடுவதில்லையே.”

‘மாயாண்டி முதலியார் மகளே நான் மணந்து கொள்ள முடியாதபடி நீயும் உன் அப்பனும் சேர்ந்து

கொண்டு கெடுத்து விட்டீர்கள் அல்லவா ?”

“நாங்கள் என்ன செய்வோம்! உங்களை யார்

மணந்துகொள்ள வேண்டாம் என்றது?”

‘’ இந்தப் பூனேயும் பால் குடிக்குமா ஒன்றும் தெரி யாதவன்போல் பேசுகிருன். நடக்கவிருந்த பரியத்தை நிறுத்துவதற்காக, குருசாமியை என் தந்தையிடம் அனுப்பி, பாதி சொத்து தருவதாகச் சொல்லி அவர் மனத்தை மாற்றிக் கலைத்து விட்டீர்கள் அல்லவா ? பிறகு எனது வற்புறுத்தலால் மீண்டும் திருமணம் கூடியது. நீ அல்லியை மயக்கிக் கெடுத்ததஞல், அவள் என்னே மணந்துகொள்ள மாட்டேன் என்று மறுத்திருக்கிருள். அதல்ை மாயாண்டி முதலியார் திருமணத்தையே நிறுத்தி விட்டார். எனவே, எல்லர்வற்றுக்கும் காரணம் நீ தான். என் இன்ப வாழ்விற்கு எமனுகக் குறுக்கிட்ட வன் அல்லவா நீ ?” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/152&oldid=655997" இலிருந்து மீள்விக்கப்பட்டது