பக்கம்:மலர் மணம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 மலர்

நானும உன் அம்மாவும் காசி இராமேசுரம் போய்விடு கிருேம். நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் நான் சொல்லலாம்.”

என்று வருத்தத்துடன் சொல்லிக்கொண்டே அப்பா நாற் கா லி யை வி ட் டு எழுந்தார். அம்மாவும் அப்பாவையே ஆதரித்துப் பேசினர்கள். நான் அறை வாயிற்படியண்டை நின்றுகொண்டிருந்த கற்பகத்தைப் பார்த்தேன்-கற்பகம் என்னைப் பார்த்தாள்-இருவரும் பேந்த பேந்த விழித்தோம். கண்ணேக் கசக்கிக் கொண்டே கற்பகம் என் கண்ணிலிருந்து மறைந்தாள். நானும் கண் கலங்கினேன். -

இந்த நேரம் பர்ர்த்து, கலிங்கநத்தத்திலிருந்து காளியப்பன் என்பவர் வந்தார். முத்தைய முதலியார் அனுப்பியிருப்பதாக் அப்பாவிடம் கூறினர். என்ன செய்தி என்று அப்பா வேண்டா வெறுப்புடன் கேட்டார்.

“ தம் மகன் பாண்டியன் திருமண விவகாரமாக அவர் உங்களிடம் என்னே அனுப்பினர்.” - -

“ இதற்கு முன்பு இரண்டுமுறை எங்களோடு செய்துகொண்ட ஏற்பாட்டை முறித்துக்கொண்டாரே, மீண்டும் ஏன் எங்களிடம் வருகிறார் ? ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்றபடி அவர் கெடுத்தவரையும் போதாதா? அவமானப் படுத்தியது போதாத்ா ? விளையாடுகிருரா என்ன ? பெண் என்று நினைத்தாரா? அல்லது கத்தரிக்காய் பேரம் என்று எண்ணிக்கொண்டாரா? அவருக்கும் அவர் மகனுக்கும் எங்கள் விட்டுப்பெண் பிடிக்காதே! இன்னும் பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/168&oldid=656013" இலிருந்து மீள்விக்கப்பட்டது