பக்கம்:மலர் மணம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 167

இடமாக-அரம்பை ஊர்வசியாகப் பார்ப்பார்களே ! நாங்கள் எங்கே யோவோம்? இன்ைெரு வீடுபோய்ப் பார்க்கச் சொல்லும் !’

“ நான் சொல்வது முழுமையும் பொறுமையாகக் கேளுங்கள்! அவர் முன்னேய முத்தைய முதலியார் அல்லர்-இப்போது புது முத்தைய முதலியாராக ஆய்விட்டார். முந்தி நடந்து போனதற்காக மிகவும் வருத்தப்பட்டார். உங்களிடம் ஆறுதல் சொல்லச் சொன்னர். இப்போது முடிவாக உங்கள் மகளையே கட்டுவதென்று உறுதிபூண்டுவிட்டார். இனி இந்த முடிவு மாருது. ” -

“ எப்படி இந்த முடிவுக்கு வந்தார் ?”

‘ அதுவா? மாயாண்டி முதலியார் தம் மகளைக் கொடுப்பதாகச் சொல்லித் திடிர் என்று மறுத்துவிட்டா ரல்லவா? அதல்ை அவருக்குப் போட்டியாக உங்கள் மகளையே கட்டி அவரை அவமானப் படுத்தவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.” -

“ எனக்குப் போட்டியாக வந்த மாயாண்டியே பெண் கொடுக்க மறுத்துவிட்டபோது, நான்மட்டும் எப்படிக் கொடுக்க முடியும் ? அவன் ஏன் கொடுக்க வில்லை தெரியுமா ?”

‘ தெரியும்-தெரியும் ! நாங்கள் பிறகு கேள்விப் பட்டோம். முத்தைய முதலியாரின் மனைவி வேறு குலத்தைச் சேர்ந்த பெண் என்பதால் கொடுக்க வில்லையாம். ‘

“ அப்படியென்றால் நான்மட்டும் எப்படிக் கொடுப் பேன் ? நான் என்ன சாதிகெட்ட சடையன ?”

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/169&oldid=656014" இலிருந்து மீள்விக்கப்பட்டது