உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலர் மணம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 203

இவ்வாறு பேசியபடியே அல்லி கண்ணயர்ந்தாள். இரவில் தூங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் அம்மா பக்கத்திலேயே இருந்துகொண்டிருந்த அல்லி-பகல் நேரத்தில், மாடிக்கு வா, பேசிக்கொண் டிருக்கலாம் என்று நாகை வலிய வம்புக்கிழுத்தாலும் வராமல், எனக்குக் காட்சிக்கு அரியளாகி அடுப்பங்கரையிலேயே உழன்று கொண்டிருந்த அல்லி-கணவைேடு அடிக்கடி பேசிச் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தால் பெரிய வர்கள் ஏதாவது நினைப்பார்கள் என்று கூசி, என்ன ஏங்கச்செய்து, பெரும்பாலான நேரங்களில் என்னிட மிருந்து ஒதுங்கியே இருந்த அல்லி-இப்போது என்னே விட்டுப் பிரியமுடியவில்லை என்கிருள்; உள்ளுரிலேயே-- பக்கத்துத் தெருவிலே பிரிந்து இருக்கவே பின்வாங்கு கிருள். அவளுக்கு என்மேல் உள்ள அளவு கடந்த அன்பைப் புரிந்துகொள்ள இது எனக்கு ஒரு பெரிய

வாய்ப்பாயிற்று.

அவள் கண்ணுறங்கியும் என் கண்கள் மூடவில்லை. இவ்வளவு பற்றுடைய மனைவியை நான்மட்டும் எப்படி ஆறுமாத காலம் பிரிந்திருக்க முடியும்? மேலும், பிள்ளை பெற்று, தான் நல்லபடியாகத் திரும்ப முடியுமோஎன்னவோ என்று அவள் அஞ்சியதை எண்ணியபோது எனக்கும் அத்தகையதோர் அச்சம் ஏற்பட்டது. இந் நிலையில், அவள்மேல் எனக்குக் கட்டுக்கடங்காத பரிவும் பற்றும் உண்டாயின. தாய் தன் குழந்தையின் தலையை நீவுவதுபோல், என்னையும் அறியாமல் வெகுநேரம் நான் அவள் தலையைத் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்ததை பிறகுதான் உணர்ந்தேன்-நள்ளிரவுக்குப்பின் நானும்

உறங்கிவிட்டிருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/205&oldid=656214" இலிருந்து மீள்விக்கப்பட்டது