பக்கம்:மலர் மணம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 மலர்

மறுநாள் காலே குல் விழா மிகவும் சிறப்பாக நடை பெற்றது. வந்தவர்கள் நன்கு வரவேற்கப்பட்டனர். வழக்கம்போல் வாழ்த்துகளுக்கும் குறைவில்லை. நண்பகல் விருந்து ஆரம்பமாயிற்று. -

வந்திருந்த உறவினரும் நண்பர்களும் விருந்துக்கு அமர்ந்தனர். ஆல்ை ஒருவரைக் காணவில்லை. அவர் மிகவும் முக்கியமானவர்-அவரில்லாமல் விருந்தே நடை பெறமுடியாது. அவர்தான் என் மாமா-மாமர்ைமாயாண்டி முதலியார்.

மாமா மாடியில் இருப்பதாக அறிந்து, அப்பா போய் அழைத்திருக்கிறார்-வரவில்லை. அது தெரிந்து, அம்மாவும் போய் அழைத்திருக்கிறர்கள்-வரவில்லை. அது தெரிந்து, நானும் போய் அழைத்தேன்-வரவில்லை. என்ன காரணம் என்று எல்லோரும் வினவினுேம்-பசி இல்லை யாம். மேலும் மேலும் நச்சரித்தோம். வெகுநேரம் சென்று உண்மையைக் கக்கினர்-இல்லை நஞ்சு கக்கினர்.

கற்பகத்தின மாமனர் முத்தைய முதலியாரும் சூல் கொண்டாட்டத்திற்கு வந்திருந்தார். அவரை மாமாவுக்குப் பிடிக்கவில்லை போலும். அதை மனத்தில் வைத்துக்கொண்டு என்னென்னவோ சொன்னர். அப்பா தன்னே (மாமாவை) மதிக்கவில்லையாம் ; முத்தைய முதலியாரைத்தான் அதிகமாக மதித்து வரவேற்பு செய் தார்களாம். தான் பழைய சம்பந்தியாம்-நேர் மைத்துன ராம் ; முத்தைய முதலியாரோ நேற்று வந்தவராம்சாதி கெட்டவராம். விழாவில் தான் சொன்னபடி அப்பா நடக்கவில்லையாம் ; முத்தைய முதலியார் சொன்னபடி யெல்லாம் நடந்து, நிகழ்ச்சிகளேச் செய்தார்களாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/206&oldid=656215" இலிருந்து மீள்விக்கப்பட்டது